சம்மாந்துறையில் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு

எம்.எம்.ஜபீர்-
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை பிரதேசத்தில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் எம் மண்ணுக்கு மரம் தந்த நிழல் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கல்லரைச்சல் சிறுவர் பூங்கா, கைகாட்டி சிறுவர் பூங்கா மற்றும் அன்வர் இஸ்மாயில் மாவத்தை காபட் வீதி உள்ளிட்ட 14 கொங்கீறீட் வீதிகள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் சிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் சப்றாஸ், மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -