நியுசிலாந்தில் 49 பேரைக் சுட்டுக் கொன்றவன் அவுஸ்திரேலிய பயங்கரவாதி என்கிறார் பிரதமர்

நியூசிலாந்தில் முஸ்லீம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கைதுசெய்யப்பட்டுள்ள நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

நியூசிலாந்து தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அவுஸ்திரேலிய பிரஜை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத போக்குடைய வலதுசாரி பயங்கரவாதியின் தாக்குதல் குறித்து நாங்கள் கடும் சீற்றமடைந்துள்ளோம், என தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் நாங்கள் எந்த வித தயக்கமும் இன்றி இதனை கண்டிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

அவுஸ்திரேலியர்கள் எவரும் கொல்லப்பட்டுள்ளனரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -