30 செக்கன் முந்தியிருந்தால் எங்கள் உடல்களையே விமானத்தில் ஏற்றியிருப்பர்-பங்களாதேஷ் வீரரின் கண்ணீர் கதை.

நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 50 க்கும் அதிகமானோர் பரிதாபமாக பாலியாகியுள்ள சம்பவம் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

இச் சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நியூசிலாந்தில் இருந்த வங்கதேச அணி வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் கண்ட வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரர், தமீம் இக்பால் கூறுகையில், நான், முஷ்பிகும் ரஹீம், மகமத்துல்லா மூவரும் மைதானத்தில் இருந்து அப்படியே மசூதிக்கு செல்ல முடிவு செய்திருந்தோம்.

பேருந்து 1.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் மகமதுல்லா பத்திரிகையாளர்சந்திப்பு சென்றுவிட்டார்.

இதனால் அவர் வரும் வரை காத்திருந்தோம். அவர் வர தாமதமானதால், டிரெஸ்சிங் ரூமில் தைஜுல் இஸ்லாமுடன் கால்பந்து விளையாடினோம்.

அதன் பின், அணி ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரனையும் சவும்யா சர்காரையும் (இருவரும் இந்துக்கள்) ஹோட்டலில் விட்டுவிட்டு மசூதிக்க செல்ல முடிவு செய்திருந்தோம்.

அணியில் இருந்த மேலும் சில வீரர்களும் எங்களுடன் இணைந்துகொண்டனர். பேருந்து மசூதி அருகே சென்றபோது, ஜன்னல் வழியாக பார்த்தால், சிலர் கீழே சரிந்து விழுந்து கொண்டிருந்தனர்.

நாங்கள் குடித்துவிட்டோ, அல்லது மயக்கத்திலோ விழுகிறார்கள் என்று நினைத்த போது, இன்னொரு இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அவர்கள் அனைவரும் தொழுகைக்கான தொப்பி அணிந்திருந்தனர். டிரைவர் உடனடியாக மசூதி முன்பு பேருந்தை நிறுத்தினார். அதன் பின் அங்கு ஓடிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் என்ன ஆனது என்று கேட்ட போது, யாரோ, உள்ளிருந்து துப்பாக்கியால் சுடுகிறார்கள், உள்ளே செல்லாதீர்கள், ஓடிவிடுங்கள் என்று உயிர் பயத்தில் நடுங்கிய படி கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டு எங்களுக்கு பீதியடைந்துவிட்டது. இதனால் பேருந்தை பின்னால் எடுக்க சொன்னோம். ஆனால் எடுக்கவில்லை,மசூதிக்குள் இன்னும் சிலர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கொண்டிருந்ததை கண்முன் பார்த்தோம்.

பின் கத்தத் தொடங்கினோம். அதுவரை அங்கு பொலிஸ் யாரும் இல்லை. பிறகுதான் கமாண்டோ படையினர் வந்தனர். நாங்கள் ஏழு எட்டு நிமிடம் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேருந்துக்குள் இருந்தோம். பிறகு கதவை எட்டி உதைத்தோம்.

டிரைவர் அதைத் திறந்தார். இறங்கி பூங்கா வழியாக ஓடத் தொடங்கினோம். அப்போது இன்னொரு பயமும் ஏற்பட்டது.

நாங்கள் பெரிய பாக்கை வைத்துக்கொண்டு இப்படி ஓடுவதைக் கண்டால், பொலிசார் வேறு மாதிரி நினைத்துவிடுவார்கள் என்று எண்ணி, சிறிது தூரத்திற்கு சென்ற பின் நடந்து சென்றோம்.

நாடு திரும்புவதற்காக கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் போகும்போது ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டோம். முப்பது செகண்ட் நிலைமை மாறியிருந்தால், நமது உடல்தான் விமானம் ஏறியிருக்கும், கண்ணுக்கு முன் மரணத்தைச் சந்தித்தோம். இதை ஒரு போதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -