Admin-message ********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

விலகியது முக்காடு


#SLMC ன் ஆரம்பகால முக்கிய போராளி
#மர்ஹும் அஸ்றப் ன் பாசறை
#தேசிய காங்கிரஸின் உருவாக்கத்தின் பங்குதாரர்
#தேசிய காங்கிரஸின் இணைத் தலைவர்
#முன்னைநாள் மாகாண சபையின் இரண்டு ஆட்சிக்கால முழு அமைச்சர்
#முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்
#கவர்னர் பதவிக்கு வருவாரா என்று பேசப்பட்டவர்
#அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தவிசாளர்

என்றேல்லாம் அழைக்கப்பட் Uthumalebbe JP இறுதியில் நானும் ஒரு சாதாரண சராசரி அரசியல்வாதிதான் என்பதை நிருபித்து விட்டார் என்றும்,
அவரின் அரசியல் ஆளுமையையும் , அசிலையும் அறிந்து கொள்ள அல்லாஹ் தந்த ஒரு சந்தர்பம். 
என்றும் , உங்களின் அரசியல் நடவடிக்கைகளுடன் துணையாக இருந்த ஒரு ஆளுமைக்கு நீங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு அற்ப பதவியே நீங்கள் இப்போது பெற்றுள்ளது என்றும் பலமான விமர்சனங்களை எல்லாத்தரப்பினராலும் தற்போது சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்றதை எல்லோரும் அறிவோம்.

கடந்த சில காலமாக ஆளுநர் போகும் இடமெல்லாம் கூடவே சென்று சமூக வலைத்தளங்களில் அவரின் அபிமானிகள் பதிவிட்டதும் இப்படியான ஒரு பதவியை பெறத்தானா என்ற கேள்விகள் நியாயமானதே.
தேசிய காங்கிரஸின் தலைவரின் அணுகுமுறைகளும் , உதாரணங்களும், செயற்பாடுகளும் அவருக்கு அனுபவமாக இருக்கும் போது அவரின் ஆற்றாமையையும், அறியாமையையும்,பதவி ஆசையுமே அவரின் பதிவியேற்பு மக்களுக்கு காட்டியுள்ளதுடன், அவரை சுற்றியிருந்த தேசிய காங்கிரஸின் கெளரவ அடையாளத்திரையும் இத்துடன் நீங்கியுள்ளதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.


நிச்சயமாக அவர் தடுமாறுகிறார்.
அவரை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடாத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் . கற்றவர்களும்,மூத்தவர்களும் வழிகாட்டியாக இருந்த நிலை மாறி உற்றாரும் , உறவினரும் தற்போது வழிகெடுத்துக்கொண்டிருப்பதை அவர் அறிய நீண்ட காலம் எடுக்காது.
இவ்வளவு தகைமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதாக நினைத்துக்கொண்டு அவர் மீது அபிமானம் வைத்துக்கொண்டுள்ள அறியா அபிமானிகளுக்கு நிச்சயமாக ஏமாற்றமே கிடைத்துள்ளது.
அவர் பெற்ற பதவியால் எதனை சாதிக்கலாம் , யாரை பழிவாங்கலாம் என்று நினைத்தாரோ - சோரம்போனதை தவிர.

உச்ச அதிகாரத்தில் இருந்து அட்டாளைச்சேனை மக்களின் மனதை வெல்ல முடியாமல் தடுமாறியதை நாம் அறியாமலும் இல்லை.
அதற்கு கடந்த பிரதேச சபை தேர்தல் முடிவுகள் சிறந்த உதாரணம் .
புலி என்றும் , சிங்கம் என்றும் அவரை வர்ணிக்கும் நீங்கள் இவ்வளவு அதிகாரத்தையும் வைத்து உங்களின் வட்டாரத்தையே வெல்ல முடியாதளவிற்கும் இதுவரை அட்டாளைச்சேனை மக்களின் மனதை மாற்றமுடியாமல் போனதற்கும் நீங்கள் பெற்ற அதிகாரங்களையா?
அல்லது உங்களின் ஆளுமையையா?
குறை சொல்ல போகிறீர்கள் .
அல்லது தற்போது பெற்றுள்ள பதவியை வைத்தா சாதிக்க போகிறீர்கள். உங்களின் அரசியல் முதிர்ச்சியை கண்ணால் பார்த்தோம் ஆல்லவா?
ஒலுவில் , பாலமுனை மக்கள் அதாஉல்லா அவர்களின் தீர்கதரிசனத்தை நம்பி கடந்த முறை அமோக ஆதரவு வழங்கினார்களே தவிர உங்களது வளர்சியில் பங்கு எடுக்கவில்லை என்பதே நிதர்சனம் .

தேசிய காங்கிரஸ் கட்சியில் உங்களுக்கு இருக்கும் அதிர்ப்தியானது உங்களின் உட்கட்சி விடயம், ஆனால் அக்கரைப்பற்று மக்கள் ஒரு இனம் அறியாத மரியாதையை உங்கள் மீது வைத்திருந்தார்கள் அது தலைவனான ஆதாஉல்லா என்ற பூவோடு சேர்ந்த நார் என்பதாலேயே.
நிச்சயமாக தேசிய காங்கிரஸ் தலைமையும் அக்கரைப்பற்று மக்களும் உங்களை எந்த சந்தர்பத்திலும் கெளரவபடுத்த மறக்கவில்லை. இருந்தும் நீங்கள் மாகாண அமைச்சர் பதவி காலியானதும் ஆயத்தமாகி விட்டீர்கள் என்ற செய்திகள் அறியாத தேசிய காங்கிரஸ் அமிமானிகள் மிக விரைவில் உண்மைகளை அறிவார்கள்.
உங்களால் வலிந்து உருவாக்கப்பட்ட கூட்டுச் சதிகளின் உண்மைகள் வெளிவரும் போது உங்கள் அபிமானிகள் புரிந்து கொள்வார்கள் , அதுவும் மிக விரைவில் நடக்கத்தான் போகிறது . பாயிஸ்,அமீர் TA, துல்சான், ஆரிப் சம்சுடீன் போன்றோருடன் நீங்களும் அவசரமாக இணைந்துள்ளீர்கள்.
அவர்களின் தற்போதைய நிலையே உங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்ற கசப்பான செய்தியை அனுபவிக்கதான் போகிறீர்கள்.

விசுவாசி
எம்.எம்.எஸ்.ரிஸான்

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.