அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 37 வயதான இந்துப் பெண் களமிறங்கத் திட்டம்

மெரிக்க காங்கிரஸின் முதல் இந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர் துல்சி கபார்ட் 2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

நான் இது குறித்து தீர்மானித்துள்ளேன் அடுத்த வாரம் இது குறித்து அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

37 வயதான கபார்ட் ஈராக் யுத்தத்தில் ஈடுபட்டவர் என்பதுடன் அமெரிக்க காங்கிரஸிற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இந்து - சமோவன் அமெரிக்க சமூக பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் சமாதானம் என்பதே எனது பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக விளங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜனநாயக கட்சியில் உள்ள தாரளவாதிகள் மத்தியில் துல்சி கபார்ட்டிற்கு ஆதரவுள்ள போதிலும் அவர் கட்சிக்குள் கடும் போட்டியை எதிர்கொள்வார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனநாயக கட்சியின் செனெட்டர் எலிசபெத் வரன் ஏற்கனவே தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துல்சி கபார்ட் சிரியா ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தவர் என்பதும் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தை பதவியிலிருந்து அகற்றுவதை எதிர்ப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -