தனியார் வகுப்புகளுக்கு இகைக்காலத் தடை தடையை மீறினால் சட்ட நடவடிக்கை


ஹஸ்பர் ஏ ஹலீம்-
னியார் வகுப்புகளுக்கு இடைக் கால தடை உத்தரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்
இன்றிலிருந்து அனைத்து பாடசாலைகளுக்கும், மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளன, எனவே மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் விடுமுறை காலத்தினை மகிழ்ச்சியாக வீடுகளில் கழிக்க வேண்டும் என்பதால்,தயவு செய்து கிண்ணியா நகர சபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது 15.12.2018ஆம் திகதியில் இருந்து பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பம் செய்யுமாறு வேண்டுகிறோம்.
இன்றிலிருந்து 15 ஆம் தேதிக்குள் தனியார் வகுப்புகளை நடத்துவதாக முறைப்பாடுகள் நகர சபைக்கு கிடைக்கும் பட்சத்தில், அந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விடயத்தினை கருத்தில் எடுத்தற்கான காரணம் பெற்றோர்களின் வேண்டுகோளாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -