வெறியுடன் காரை வேகமாக ஓட்டிச் சென்று மூன்று உயிர்களைக் காவுகொண்ட பேருவளை முர்ஷித்


அஷ்ரப் ஏ சமத்-

னி இரவு 11.45 மணிக்கு குடிபோதையில் கைபிரைட் காரை வேகமாக செலுத்திய சாரதி (பெயா் முஹமட் முர்சித் வயது 32 பேருவளை) கல்கிசை நீதிமன்றம் இருந்து ரத்மலானை வரை பிழையான திசையில் காரைச் செலுத்தி கல்கிசை நீதிமன்றத்திற்கு 3வரின் உயிரை காவு கொண்டுள்ளாா்.

 முதலில் கல்கிசை நீதிமன்றம் அருகில் தனது நண்பரும் மோட்டபைசிக்களில் நிறுத்தி வைத்து தனது நண்பருடன் கதைத்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் வாலிபர் (சப்றாஸ் காதா் வயது 18) மோதி பலியெடுத்துவிட்டு மீண்டு ஒரு முச்சக்கர வண்டி சாரதி அனுஜா எதிரிசிங்க (18) அவரையும் பலியெடுத்துவிட்டு காரை நிறுத்தாமல் மீண்டும் வேகமாக செலுத்தியுள்ளாா்.

 அதன் பின்னா் கல்கிசை பொலிஸ் நிலையத்தினைத் தாண்டி மேலும் பிழையான திசையில் காரை செலுத்தி எதிரே வந்த வேனை முட்டியுள்ளாா். அந்த வேனைச் செலுத்திய சாரதியான (மொஹமட் ஹவுஸ் றிஸ்வான் வயது 48) ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளாா். அந்த வேனில் வந்த ஏனைய 2 சிறுவா்கள் உட்பட ஒரு பெண்னும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸாா் தெரிவித்தனா்.

சிறியதர வேனில் பிராயாணம் செய்தவா்கள் தனது குடும்பத்துடன் அகலவத்தை சென்று தெஹிவளையில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்களை கல்கிசை பொலிஸ் நிலையத்தினை தாண்டிய பிரதேசத்தில் பிழையான திசையில் குடிபோதை சாரதி காரை செலுத்தி விபத்தினை ஏற்படுத்தியுள்ளாா்.

 காரை செலுத்திய குடிபோதையுடனான சாரதியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாா். விபத்துக்குள்ளான சகல வாகனங்களும் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.

 சம்பந்தபபட்ட சாரதி உட்பட 7 பேர் 2 சிறுவா்கள் காயங்களுக்குள்ளாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்கள் அவா்களில் சிறுவா்களுக்கு இரு கால்களும் கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் ஒரு பெரும்பான்மை முச்சக்கர வண்டி சாரதி உட்பட 3 பேர் இறந்துள்ளதாகவும் கல்கிசை பொலிஸாா் தெரிவிக்கின்றனா் மேலும் ஒருவா் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கல்கிசைப் பொலிஸாா் தெரிவித்தனா்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -