வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் காங்கிரஸ் எம்பிமார்-படம் இணைப்பு






அபு அஹ்னப்-

லங்கை அரசியலில் புரட்சியேற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ மீண்டும் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பாராளுமன்றில் இறுதிப் பெரும்பான்மையைக் காண்பிக்க வேண்டிய கட்டாயக் கட்டத்தில் இருக்கும் இவ்வேளை சகல கட்சிகளில் இருந்தும் உறுப்பினர்களை வெகுமதிகளைக் கொடுத்தேனும் உடைத்துப் பெற்றுக்கொள்ளும் நிலமை நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

ஆதலால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டுச் செல்லக்கூடாது என்பதற்காக சில நாட்களாக தலைவர் ரவூப் ஹக்கீமின் கண்காணிப்பின் கீழ் ஒரே இடத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் புகைப்படங்களுடன் பரவிக் கொண்டிருக்கின்றன.

எனவே எது எவ்வாறாகினும் பணத்துக்காகவும் சொத்து சுகங்களுக்காகவும் சமுதாயத்தில் மக்களின் அபிலாசைகளைத் தூக்கிவீசி விட்டு கட்சியைவிட்டுச் செல்ல உறுப்பினர்கள் சிலர் ஆயத்த நிலையில் இருப்பதும் யாராலும் மறுக்க முடியாது. உதாரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அம்பாரை மாவட்ட மக்களுக்களுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் வழங்கப் பட்ட தேசியப்பட்டியல் அதன் மூலம் மக்கள் இன்னும் எந்தப் பலனும் பெற்றுக் கொள்ளாத இவ்வேளை மாவட்ட மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டு விலகிச் செல்லும் நிலை கூட இன்று ஏற்பட்டுள்ளமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

(ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாங்கள் கட்சியை விட்டுச் செல்லமாட்டோம் என்று ஒருமித்து கூறியிருப்பதும் இங்கு சுட்டிக் காட்டவேண்டிய ஒன்று.)

எனவே தன் சுகபோகங்கள் வெறும் ஒன்றரை வருடங்களா என்னும் கேள்வி அனேகரிடம் எழுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -