ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் உடனடி தீர்வு!!!

-உபவேந்தர் பேராசிரியர் நாஜீம்-

எம்.எஸ்.எம்.ஹனீபா-
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படுமென, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்தப் பொதுக் கூட்டம், சங்கத்தின் தலைவர் ஏ.எம். அன்வர் தலைமையில், பல்கலைக்கழக ஒலுவில் வளாக ஊழியர் மேம்பாட்டு மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் உரிமைக்கு மட்டுமல்லாது தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பதோடு ஊழியர்களை தனது கடமையின்பால் வழி நடாத்திச் செல்ல வேண்டும். உரிமைக்கு மட்டும் போராடக் கூடாது. சில தொழிற்சங்கங்கள் முதலாவது உரிமை மட்டும் தான் என நினைக்கின்றார்கள். கடமை இரண்டாவதாக நினைக்கின்றார்கள். அது ஒரு தவறான எண்ணப்பாடாகும்.
தொழிற் சங்கங்கள் ஒரு முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால்தான் ஒரு வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியும் தொழிற் சங்கங்கள் வெறுமென போராட்டங்களையும் வேறு விதமாதனான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது. எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் கடமையாற்றும் சகல தரப்பினரும் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள். ஒரு குடும்பம் எவ்வாறு வாழ வேண்டுமோ அவ்வாறே ஒரு நிறுவனமும் தனது செயற்பாட்டை முன்மாதிரியாக கொண்டு செல்வதற்கு சகல தரப்பினரின் ஒத்துழைப்பும் ஆலாசனைகளும் அவசியமாகும்.

ஊழியர்கள் கடமையில் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந் நிறுவனத்தை வளக்க முடியும். தொழிற்சங்கங்கள் நிருவாகத்தினருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கடமையைச் செய்யாது சில ஊழியர்கள் சலுகைகளுக்கு மட்டும் உள்ளார்கள்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களில் பிழையான முறையில் வழிநடாத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் அதன் வரையரைக்குள் செயற்பட வேண்டும்.
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை அரசாங்கம் வழங்குகின்றது. இவர்களின் தேவை பல்கலைக்கழகத்திற்கும், நாட்டிற்கும் தேவை என்பதனாலேயே கூடுதலான சம்பளத்தை வழங்குகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஊழியர்களின் நலனில் நிருவாகம் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்;வு காண்பவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல பரிணாம வளர்ச்சி கண்டு நாட்டின் அபிவிருத்திக்கும், உயர் கல்விக்கும் பெரும் பங்காற்றி வருகின்றது. கடந்த காலங்களில் இப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக இங்கு கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஒற்றுமையாகும், இதனை எதிர் காலத்திலும் முன்னெடுத்து பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்றார்.
பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -