Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்********** உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** **** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் இது என்றும் உங்களுடன் உங்களுக்காய் பயணிக்கும் உங்கள் குரல் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு.. **மற்றும் உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் முற்றிலும் இலவசமாகப் பார்வையிட இலங்கையில் உள்ளவர்கள் - F <இடைவழி> Importmirror என டைப் செய்து 40404 க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch ஆகியவற்றுக்கு மேசேஜ் அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email: [email protected] [email protected] call: 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

வீசி இஸ்மாயிலுக்கு பேசப்பட்ட தொகை 48 கோடிகள் என்கிறார் ஊடகவியலாளர் பூமுடீன்

ஏ.எச்.எம்.பூமுதீன்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் - அதன் தலைமைக்கும் துரோகம் இழைக்க முயற்சித்து , இறுதியில் மூக்குடைபட்டுப்போன வீசி இஸ்மாயிலுக்கு வழங்கப்படவிருந்த தொகை மற்றும் அந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தவர் யார்? போன்ற தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

பிரதமராக மஹிந்தவை நியமித்த கையோடு - வீசியுடனான கட்சி தாவும் பேச்சும் ஆரம்பித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அந்த பெரும்பான்மையின அமைச்சர் - எந்த அமைச்சு வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதற்கு நேரடியாக பதிலளிக்காத வீசி - "அமைச்சு மட்டும்தானா"? என வினவியுள்ளார்.

இல்லை..இல்லை பணமும் உண்டு.அது நீங்கள் நினைப்பதை விட அதிகம் என்று கூறியுள்ளார் அந்த அமைச்சர்.

சரி.,யோசித்து கூறுங்கள் எந்த அமைச்சு வேண்டும் என்று கூறிய அந்த அமைச்சரை - வீசி , கடந்த வாரம் சந்தித்து " வர்த்தக" அமைச்சை தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

"உங்களுக்கு கெபினட் அமைச்சு தரப்படமாட்டாது.பிரதியமைச்சுத்தான் தரப்படும் என அந்த அமைச்சர் கூறிவிட்டு , கல்வி , உயர்கல்வி பிரதியமைச்ச் கேட்டுவிடாதீர்கள். உங்களை ஊழல் செய்தவர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை நாசமாக்கியவர்" என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சுமத்தியவர்தான் அதன் கெபினட் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்றாராம்.

பின்னர் , சுகாதார பிரதியமைச்சை பெற்றுக்கொள்வதென்று இணக்கம் காணப்பட்டது.

பிரதியமைச்சுடன் இவருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று சும்மா சொல்லுங்களன் பார்ப்போம்.

உங்களால் கூறவே முடியாது .
இந்த தொகையை பேசியவர் ஒரு முஸ்லிம் அமைச்சர்.
அந்தப் பணம் வெளிநாட்டு வங்கியில் வீசியின் பெயரில் வைப்பிலிட இன்று காலை தயாரானது. அதற்குள்தான் வீசி மூக்குடைபட்டுப்போனார்.

இன்று காலை வைப்பிலிட இருந்த தொகை வெறும் 48 கோடிதான்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.