சம்மாந்துறையில் வித்தியாசமான ஆசிரியர்தினவிழா!

காரைதீவு நிருபர் சகா-
ர்வதேச ஆசிரியர்தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள்நாடளாவியரீதியில் இடம்பெற்றபோதிலும் சம்மாந்துறையில் வித்தியாசமானமுறையில் ஆசிரியர்தினவிழா இடம்பெற்றுள்ளது.
வழமையாக மாணவர்கள் அல்லது பாடசாலை இந்த விழாவை நடாத்தும். ஆனால் சம்மாந்துறையில் பழையமாணவர்சங்கம் இந்தவிழாவை அதுவும் வித்தியாசமாக நடாத்தியுள்ளது.
சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியின் பழையமாணவர்சங்கம் ஆசிரியர்களுக்கான வைத்தியமுகாமுடன் இணைந்ததாக ஆசிரியர்தினவிழாவை நடாத்தி சாதனைபடைத்துள்ளது.
பழையமாணவர்சங்கத்தலைவரும் அதிபருமான முத்து இஸ்மாயில் முன்னிலையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
பாடசாலையில் கற்பிக்கும் 176ஆசிரியர்கள் 44 கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் சம்மாந்துறை வைத்தியசாலை ஆதரவில் மருத்துவமுகாம் நடாத்தப்பட்டது.
சங்கத்தின் உபதலைவரும் வைத்தியஅதிகாரியுமான ஜ.எல்.எம்.றிஸ்வான் தலைமையில் மருத்துவமுகாம் நடாத்தப்பட்டது.
ஆசிரியர்கள் இரவு விரதமிருந்து காலையில் இரத்தப்பரிசோதனை தொடக்கம் இரத்த அழுத்தம் வரையிலான பவகையான சோதனைகளை இலவசமாக மேற்கொண்டனர்.
இந்தச்சோதனைகள் முடிந்ததும் அனைவருக்கும் காலையுணவு அங்கேயே வழங்கப்பட்டது. பழையமாணவர்சங்கமே அதனையும் ஏற்பாடு செய்திருந்தது.
பின்பு விசேட ஆசிரியர்தினநிகழ்ச்சி நடைபெற்றது. தென்கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.பர்வீஸ் நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் றமீஸ்அப்துல்லா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
அந்நிகழ்வு நிறைவுற்றதும் பனற்போசனும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களை இவ்வாறு பழையமாணவர்சங்கம் கௌரவித்தமை பாராட்டுக்குரியதென அதிபர் முத்துஇஸ்மாயில் நன்றிதெரிவித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -