சாய்ந்தமருது வைத்தியசாலை எழுச்சிக் குழந்தையை நோக்கி குவியும் பரிசில்கள்!!!

எம்.வை.அமீர்-

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட எழுச்சிக்குப் பின்னரான முதலாவது குழந்தை கடந்த 2018.09.20ம் திகதி இரவு 07.30 மணியளவில் பிரசவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 25ம் திகதி கிடைக்கப் பெறுமென எதிர்பார்க்கப்பட்ட குறித்த பிரசவமே இன்று நிகழ்ந்துள்ளதுடன் இனிவரும் காலங்களிலும் சாய்ந்தமருது வைத்தியசாலையில் மகப்பேறு செய்து கொள்வதற்கான நம்பிக்கையை இன்றைய மகப்பேறு ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பிரசவத்தை சாய்ந்தமருது வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி. சனுஸ் காரியப்பர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வை செய்ததுடன் இந்த பிரசவம் தொடர்பில் வைத்தியசாலை நிருவாகம், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன அதிக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளன.
 சம்பவத்தை அறிந்த வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதித் தலைவரும் சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் தலைவரும், தொழிலதிபருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் அவர்கள் வைத்தியசாலைக்கு விரைந்து பெறுமதிமிக்க பரிசில் ஒன்றினை வழங்கி வைத்ததுடன் குறித்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார். 

தொடர்ந்து குழந்தையை நோக்கி பரிசில்கள் குவிந்தவண்ணமுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -