Admin-message ********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு!!


ஒலுவில் ஜெலில்-விடுதலைப்புலி பயங்கரவாதிகள் பாவித்த ஆயுதங்களை கிழக்கிலங்கை முஸ்லிம்களிடம் விற்கப்பட்டதாகவும் அது இன்றும் பரவலாக கிண்ணியா, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் காணப்படுவதாகவும்! இதனால் எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று" அடிபட்டு மூலையில் முடங்கிக் கிடந்த பொட்டைப் புலி அண்மையில் மீடியாவில் கத்தியது!
இதை பெரும்பாண்மை இனைத்தைச் சேர்ந்த ஊடகங்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாமர மக்களிடம் எடுத்துச் சென்று ஊதிப் பெருப்பித்ததும்" சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த இனவாத அமைப்புக்களுக்கு வாயில் சீனியைப் போட்டதுபோல் அவர்கள் அதை தூக்கிப் பிடித்துக் கொண்டு' நமது சமூகத்துக்கு எதிராக பொலிஸ் நிலையம், வாக்குத் தாக்கல் என்று சென்று அமைச்சர் றிசாத்தையும், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வையும் கைது செய்ய கோசம் இட்டதையும் தொடராக தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

வடக்கிலிருந்து முஸ்லிம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்" மனித தன்மையே இல்லாமல் உடுத்த உடுப்புடன் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு' அந்த மக்கள் அங்குமிங்கும் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது முழு நாடு மட்டுமல்ல' உலக நாடுகளும் அறிந்த விடயமே.
அது இவ்வாறு இருக்கையில் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளியில் வந்து மூத்திரம் கூட கழிக்க முடியாமல் அடிபட்டு பயத்தில் மூலையில் முடங்கி கிடந்த இந்த இன்பராசா எனும் பொட்டைப் புலி! இன்று ஊடகங்களைக் கூட்டி முஸ்லிம்களிடம் ஆயுதம் இருக்கு என்று கத்துவது வேடிக்கையாகவே இருக்கிறது.
உண்மையில் இந்த இனவாதி இன்பராசா பேசிய பேச்சைக் கேட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளம் பதறுகிறதுதான்! அதற்காக நாமும் அவரைப்போல இனவாத கருத்து பேசுவதென்பது ஆரோக்கியமல்ல.
ஏனென்றால் இந்த இன்பராசாவின் கருத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கருத்தாக பார்க்க முடியாது! அதோபோல் சமூக ஒற்றுமையை விரும்பும் படித்த எந்த தமிழ் மகனும் இவருடைய கருத்தை ஆதரிக்கப் போவதில்லை. இன்றும் கூட தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையோடு சந்தோசமாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது இந்த இனவாதிக்கு புரியப் போவதுமில்லை.
இருப்பினும் இவர் தன்னை பிரபலப்படுத்துவதற்காக இப்படி பேசுகிறார் என்றோ' அல்லது அரசியலுக்கு வருவதற்காக இவ்வாறு இனவாதத்தை கக்குகிறார் என்றோ' அல்லது வெளிநாட்டவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடுகிறார் என்றோ இலகுவில் தட்டிக்கழித்து விட்டு' நாம் அமைதியாக இருக்க முடியாது!
இவ்வாறுதான் கடந்த காலங்களிலும் ஹலாலுக்கு எதிராக, பள்ளிகளுக்கு எதிராக, மாடறுப்பிற்கு எதிராக ஏன் மார்கத்துக்கு எதிராகவும் கூட இனவாதிகள் வீதிக்கு இறங்கி கூக்குரல் இட்டார்கள்! அப்போது நாம் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை' சட்டரீதியாக விடயத்தினை உடனடியாக எதிர் கொள்ளவும் இல்லை. அதன் பிரதிபலிப்பு பல இழப்புக்களையும், பிரச்சினைகளையும் முழு சமூகமும் எதிர் கொள்ள வேண்டி நேர்ந்தது.
காலம் கடந்தே ஞானம் பிறந்தது எம்மவர்களுக்கு அன்று!!

அத்தோடு மட்டும் நின்று விடவுமில்லை ஜிஹாதி என்ற புத்தகத்தை பகிரங்கமாக வெளியிட்டு' முஸ்லிம்களைப் பத்தியும் புனித மார்க்கத்தைப் பத்தியும், அவர்களின் எதிர்கால நகர்வைப் பத்தியும் இல்லாத பொல்லாததை கூறி அனைத்தையும் திரிவுபடுத்தி ஏதோ எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இலங்கை நாட்டைப் பிடிக்கப் போகிறார்கள் என்ற வகையில் கை,கால் வைத்து புத்தகம் எழுதி' பல பாகங்களாக இன்றுவரை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் உண்மையோ பொய்யோ அது ஒரு புறமிருந்தாலும்" பெரும்பான்மை பாமர மக்களிடத்தில் அந்த புத்தகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" இன்னும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பதை இன்று நாம் உணராமல் இல்லை.

"வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும் என்பதுபோல்" அன்றே இந்த சம்பிக்கவின் புத்தகத்துக்கு உரியவர்கள் உரிய முறையில் மறுப்பறிக்கையை சிங்கள மொழியில் இதுதான் உண்மை என்பதை எழுதி' பாமர சிங்கள மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருந்தால் இந்தளவுக்கு தாக்கம் செலுத்தி இருக்காது என்பதே கசப்பான உண்மை.
மாறாக புத்தகத்தை எழுதியவர் இனவாதி, அதில் சொல்லப்பட்ட விடயங்கள் பொய்யானவை, எல்லா சிங்கள மக்களும் இவ்வாறு செயற்பட வில்லை' ஒரு சிலரே இப்படி செயற்படுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு! மேடைகளிலும் தமிழ் மீடியாக்களிலும் கருத்து கூறிக் கொண்டு" அவருடைய புத்தகத்துக்கு மறுப்பறிக்கை எழுதப்போய் அது அவரை இன்னும் ஊக்கப்படுத்தியது போன்று ஆகிவிடும் என்று சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டியதன் விளைவு!

அவர் எழுதியது பொய் என்றாலும்' அது பாமர சிங்கள மக்கள் மத்தியில் உண்மை என்றே பதியப்பட்டு விட்டது இன்று.
அதோ போல்தான் இதுவும் இடுப்பொடைந்து மூலையில் முடங்கி கிடந்த பொட்டைப் புலி இன்பராசா கூறுவதெல்லாம் பொய் அதில் உண்மையில்லை' அவன் கத்திப் போட்டு போகட்டும் என்று' நமக்குள்ளே பேசிக் கொண்டு' நாலு வார்த்தை தமிழ் மீடியாக்களில் அறிக்கை விட்டுக்கிட்டு, பிரதமருக்கு சொல்லியுள்ளோம், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! சட்டம் தன் கடமையை செய்யும்' நாம் பொறுத்திருப்போம் என்று சும்மா அமைதியாக இருக்க முடியாது! அப்படி இருக்கவும் கூடாது.

"சட்டம் தன் கடமையை செய்யும்தான் அதில் சந்தேகம் இல்லை எவருக்கும்"

ஆனால் பேசப்பட்ட விடயம், கூறப்பட்ட கருத்தும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது அல்லவா அங்குதான் உதைக்கிறது! நாட்டின் சட்டம் இன வித்தியாசமின்றி உண்மையான சட்டத்தை நிலை நிறுத்துமா? உரியவர்களுக்கு தண்டனை கொடுக்குமா? அல்லது எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊத்தி தூண்டி விடுவார்களா என்று!
ஆகவே இந்த பொட்டைப் புலி இன்பராசாவின் இனவாத கருத்து விடயம் தொடர்பாக எமது அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், ஜம்மியத்துல் உலமா போன்ற அமைப்புக்கள், கல்வியளாளர்கள், அதிகாரத்தில் இருக்கக் கூடிய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து!
இந்த நாட்டின் சட்ட துறையிடம் , நாட்டின் ஜனாதிபதியுடன், நாட்டின் பிரதமருடன், பாதுகாப்பு அமைச்சுடன் ( முக்கியமாக எமது அரசியல் தலைவர்கள்) சட்ட ரீதியாக அனைத்து விடயங்களையும் விரைவாக முன்னெடுத்துச் சென்று.
இந்த இனவாதிக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்து. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.

அத்தோடு விட்டு விடாமல் இந்த ஆயுத குற்றச் சாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லை என்றும், நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தே வருகிறது' அதை சீர்குழைப்பதற்கே இப்படியானவர்கள் காலத்துக்கு காலம் மக்களை திசை திருப்புகிறார்கள் என்று!
ஜனாதிபதி மூலமோ, பிரதமர் மூலமோ அல்லது பாதுகாப்பு துறைகள் மூலமோ பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு உறுதியாக சொல்லவைக்க வேண்டும்.
அப்போதுதான் பாமர சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும் இப்படியான நஞ்சு கருத்துக்களை ஆரம்பத்திலே தடுத்து நிறுத்த முடியும்.

இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்த பொட்டைப் புலி இன்பராசாவைப் போன்று பல ராசாக்கள், பல ஞானசாராக்கள், பல பிரசாத்துக்கள் காலத்துக்கு காலம் உருவாகி எமது சமூகத்தை நின்மதியாய் தலை நிமிந்து சந்தோசமாய் வாழ விடவே மாட்டார்கள்!
இதை நினைவில் வைத்து' நாம் ஒற்றுமையாக செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
அல்லாஹ் நம்மனைவரையும் என்றும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்கு உதவி செய்யட்டும்.முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.