ஐஸில் கரையும் உனைஸ் படுகுழிக்குள் பாடும் ரீங்காரம்...


முகமட் ஜலீல்-

குழிபறித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு வன்னி மாவட்டத்தின்கடந்த பாராளுமன்றத் தேர்தல் களம் நல்லதோர் படிப்பினை. 2015 இல் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிட முஸ்லிம்கள் மறுத்தபோதும் வரட்டுத் தெம்புடன் உனைஸும்,மஸ்தானும் வன்னியில் களமிறங்கினர்.தேர்தல் களத்துக்குப் புதுமுகமான மஸ்தானை விடஅதிக வாக்குகளைப் பெறலாமென்ற மமதையும். வெற்றிக்களிப்பும் உனைஸின் நெற்றியைத்தொற்றிக் கொண்டதைக் கண்டு பலரும் வியந்தனர். ஆனால் ஆண்டவனின் அருட்கடாட்சம்மஸ்தானின் மடிக்குள் விழுந்ததால் அவர் எம்பியானார்.(M.P), உனைஸ் 'எம்ற்றி (M.T)'ஆனார்.

பின்னர் என்ன பிரதி அமைச்சராகப் பதவி உயர்ந்த மஸ்தானின் சிறகு வானுயர விரிந்ததில்உனைஸுக்கு விருப்பமில்லை. சிட்டுக் குருவியின் சிறகை எட்டிப் பிடிக்கப் போய் மடி கவிழவிழுந்ததிலும் உனைஸுக்கு இஸ்டமில்லை. ஆட்சி அதிகாரத்தை ஆடி, ஓடிப் பிடிப்பதில்லை. ஆற அமர்ந்து ஆலோசித்துக் காரியமாற்றினால் ஆண்டவனின் அருளும் கிடைக்கும். அதிகாரத்தில் உனைஸுக்குள்ள ஆர்வம், ஆவல் இந்த ஆறுதலுக்கு இடமளிப்பதாகவும் தெரியவில்லை.

ஆறு வருடத்துக்கு மஸ்தானுக்கு வழிகாட்டி அடுத்த தேர்தலில் ஜெயிக்கலாம் என்ற உனைஸின்அம்மாக் கனவுக்கு அடங்காப்பிள்ளை மஸ்தானின் போக்குகள் பிடிக்க வில்லை. இத்தனைக்கும் அமைச்சர் ரிஷாதின் பாசறையில் மிக அன்பாக வளர்க்கப்பட்ட உனைஸ்,இவ்வளவு வேகத்தில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதைக்கு வருவாரென நன்றியுள்ளோர்நினைத்திருக்க வாய்ப்பும் இல்லை. அடுத்த கணத்தில் அடித்தார் 'அந்தர்பெல்டி' . தனித்துவதலைவரின் தன்மானம் காக்க வந்த தனயனுக்கு காங்கிரஸில் நல்ல வரவேற்பு. ஆகா ஓகோ? ரிஷாதின் வீட்டுக்குள்ளே ஒரு வைரியை வளர்ப்பதுதானே தனித்துவத்தின் தணியாதஆசை.வந்தாண்டா உனைஸ் வெந்தாண்டா ரிஷாத் என்றார் வாய்ப்பேச்சு வீரர். காங்கிரஸில்சேர்ந்தது முதல் இன்று வரை உனைஸ் ஐஸில் கரைந்தவாறே காலங் கடத்துகிறார்.வடபுலமீட்புப் போராட்டத்தில் எஞ்சியுள்ள சவால்களை வெற்றியீட்டும் ரிஷாதின் வேட்கைகளுக்குவேட்டு வைக்கும் வேட்டைக்காரனாகவே உனைஸ் வன்னிக்களத்தில் வலம் வருவதைக்காணமுடிகின்றது. வடக்கில் இடம்பெறும் அத்தனை அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும்வடபுல முஸ்லிம்களின் தலைமை வீணான வம்புக்கும்,விமர்சனங்களுக்கும்உள்ளாக்கப்படுவது ஏன் என்ற யதார்த்தம் பிரதியமைச்சர் மஸ்தானுடன் செயற்பட்ட மெளலவி முனாஜிதின் சிந்தனையைக் கிளறியது. இதனால் உடன் வெளியேறி வந்த அவர் அமைச்சர்ரிஷாதுடன் இணைந்தமை மஸ்தானை விட உனைஸுக்கே பெரும் பேரிடியாம். இதனால்தலையைப் பொத்திக் கொண்டு படு குழிக்குள் விழுந்த உனைஸ் தமிழர் தாயகத்துக்காகரீங்காரம் பாடுகிறார். வில்பத்துவும்,சன்னார் அபிவிருத்தியும் உனைஸை சங்கடத்தில்மாட்டியதில் பயனுறப்போவது புலிகளின் சிந்தனையில் வளர்ந்த தமிழ்பெரும்பான்மைவாதிகளுக்கே. படுகுழிக்குள் விழுந்து உனைஸ் பாடும் ரீங்காரம் வடபுல முஸ்லிம்களைஏதிலிகளாக்காவிட்டால் போதும் என்பதே எமது பிரார்த்தனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -