அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மன்சூர் எம்பிக்கு நடந்தது என்ன? விபரிக்கின்றார் எம்எல்.சுபைதீன்..!!




ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்-ம்மாந்துறை தேர்தல் தொகுதி - சம்மாந்துறை பிரதேச சபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய அளவில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் அடங்களாக இயற்கை வள அழிப்பு எனும் முன் நிலைப்படுத்தப்பட்ட காரணங்களினால் இன்னும் பல வகையான முக்கிய பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்தும் வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சம்மாந்துறை பிரதேச மக்களுடைய கட்டுமான பணிகளுக்கு தேவையான மண்ணினை கூட குறித்த பிரதேசத்தில் இருந்து சம்மாந்துறை மக்களால் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அத்தோடு குறித்த மண் அகழ்வில் ஈடுபட்டுள்ள பேர்மிட் வியாபாரிகள் தாங்கள் அகழ்ந்து எடுக்கும் மண்ணினை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதினால் சம்மாந்துறை மக்களுக்கு மேலும் இது பாரிய பிரச்சினையாக பிரதேசத்தில் மட்டுமல்லாது மாவட்ட ரீதியாகவும் உருவெடுத்துள்ளது.

இப்பிரச்சினையினை 13. 09.2018 வியாழக்கிழமை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்பித்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முனைந்த பாரளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தவிசாளருமான எம்ஐஎம்.மன்சூரை சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் பல காரணங்கள் கூறி தடுத்து நிருத்தியமையானது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடையமாகவே எல்லோராலும் பார்க்கப்படுகின்றது. இந்த விடயமானது ஏற்கனவே மண் அகழ்வில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கும், அவர்களுக்கு மண் அகழ்வில் ஈடுபடுவதற்கான பேர்மிட் அணுமதி பத்திரம் வழங்கிய அதிகாரிகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே பிரதி அமைச்சர் பைசல் காசிம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரினை குறித்த விடயம் சம்மந்தமாக தொடர்ந்து தனது அறிக்கையினை கூற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.என்பது தெளிவான விடமாக புலப்படுகின்றது.

சம்மாந்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் சம்மாந்துறை மக்களுடைய வாக்குகளை பெற்ற பிரதேசத்தின் அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் குறித்த பிரதி அமைச்சர் பைசல் காசிமுடைய நடவடிக்கையினால் கோபம் அடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்ததுடன் மீண்டும் ஏனைய அதிகாரிகளின் சமரச பேச்சுக்களுக்கு அமைவாகவும், இருவரும் ஒரே கட்சியை பிரதிநிதித்துவ படுத்துகின்றன மாவட்டத்தில் உள்ள அரசியவாதிகள் என்ற அடிப்படையில் கட்சியின் ஒருமைப்பட்டினை நடை முறைப்படுத்த வேண்டிய கடமைப்பட்டின் நோக்கம் காரணமாகவும் அபிவிருத்தி கூட்டத்தில் தொடர்ந்தும் பங்கேற்றதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதனை நடு நிலையாக பார்க்கின்றபோது சம்மாந்துறை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையினை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரியப்படுத்தி எதிர்கால சந்ததியினருடைய இயற்கை வளத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் முனைப்புடன் செயற்படும் பாரளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு மாவட்டத்தில் உள்ள ஏனைய பாரளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், அரச உயர் நிலை அதிகாரிகள் மற்றும் ஒரே கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் முக்கயஸ்தர்கள் என எல்லோரும் தங்களுடைய சுயலாபங்கள், அரசியல் கருத்து முறன்பாடுகள் மற்றும் இன்ன பிற பிரச்சினைகளை புறந்தள்ளி வைத்துவிட்டு ஒத்துழைப்பு வழங்குவதானது மாவட்டத்தில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பிரதி உபகாரம் என்பதற்கு அப்பால் மனித நேயமிக்க நடுநிலை வாதிகளின் மானுட பன்பு என்பதனையும் இறுதியாக நான் இங்கு சுட்டிக்காட்டிக்கொள்வதில் சம்மாந்துறை மண் வாசனையினை நுகர்ந்தவன் என்ற வகையில் மகிழ்சி அடைக்கின்றேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -