போலி விமர்சனங்களே வெற்றியை பறைசாற்றுகின்றது


னபலய மக்கள் பேரணிக்கு எதிராக எழுந்துள்ள போலி விமர்சனங்களே அதன்வெற்றியை பறைசாட்டுவதாக கொழும்பு மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர்செனானி சமரநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்து வெளியிட்டஅவர்,
நல்லாட்சியை அரசாங்கத்தை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்றும் எமது முயற்சியின்முதல் படியே இந்த ஜனபலய போராட்டம்.
ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் கீழ் மட்டம் முதல் மேல் மட்ட வர்த்தகப்பிரிவினர் வரை அனைவரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தினர் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் இரகசியமாகசட்டமூலங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
நாட்டை பிளவடையச் செய்வது மாத்திரமின்றி தொடர்ந்து வரிகளை சுமத்தி மக்கள்மீதான சுமைகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.

ஜனபலய மக்கள் பேரணிக்காக கொழும்பை நோக்கி படையெடுத்த மக்கள் வெள்ளத்தைக்கண்டு அரசு அச்சமடைந்துள்ளது.அதன் வெளிப்பாடாகவே இன்று ஜனபலய மக்கள் பேரணிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மதுபோதையில் ஓரிருவர் விழுந்து கிடந்ததை படம் பிடித்து சமூக வலைகளில்விமர்சிகின்றனர். லட்சக்கணக்காணவர்கள் திரண்ட ஒரு பேரணியில் ஓரிருவர்மதுபோதையில் தள்ளாடியதை போல படம் பிடித்து காட்டி இந்த பேரணியின் வெற்றியைதிசை திருப்பும் முயற்சிக்கின்றனர். இவர்களின் இந்த சேறுபூசல்கள் தொடர்பில் மக்கள்மிகக் தெளிவாக உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -