கல்குடா அபிவிருத்தியில் றியாழுடன் விளையாடும் பிரதி அமைச்சர் அமீர் அலி!


அபூ சம்ரி-
டந்த காலம் தொட்டு இன்று வரை கல்குடா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும் இருந்து அபிவிருத்தி செய்து வருவதாக மார்தட்டிக் கொள்ளும் பிரதியமைச்சருக்கு அண்மைக் காலமாக முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் றியாழ் அவர்கள் சவாலாக திகழ்ந்து வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கறிஞர் றியாழ் அவர்கள் தேர்தலில் தோல்வி கண்டாலும், மக்கள் சேவையிலும்,பிரதேச அபிவிருத்தியிலும் பின்னிற்கவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சினூடாக கல்குடா மக்களின் நீண்ட தாகமாக இருந்த தூய குடிநீர் திட்டம் பாரிய நிதியோதிக்கீடு மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, அது போல கடந்த வருடம் அமைச்சரின் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் சுமார் 12 கோடி பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் றியாழ் அவர்களால் இந்த அபிவிருத்தி திட்டங்கள் இந்த பிரதேசத்திற்கு கொண்டுவர முடியாது என்ற நம்பிக்கையில் பிரதி அமைச்சர் கவனமில்லாது இருந்தது மாத்திரமின்றி இவைகள் தொடர்பாக நக்கலான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார்.

ஆனால் றியாழ் அவர்கள் தான் எடுத்த முயற்சியை வெற்றியடையச் செய்து சாதித்து காட்டினார், இதனால் பிரதி அமைச்சர் அமீர் அலி, றியாழ் அவர்களின் விடயத்தில் தற்போது கவனமாக இருக்கிறார். றியாழ் இந்த வருடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சினூடாக நிதியை பெற்று கல்குடா முஸ்லிம் பிரதேசங்களுக்கு வட்டார ரீதியாக அபிவிருத்திகளை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த விடயங்களை அறிந்து கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி , றியாழ் அவர்கள் வட்டார ரீதியாக என்ன என்ன வேலைத் திட்டங்களுக்கு செயற்திட்ட வரைபு மேற் கொண்டிருக்கிறாரோ அந்த திட்டங்களுக்கு தனது அமைச்சின் ஊடாக பாதி வேலைகளை செய்வதற்கு அவசர அவசரமாக நிதிகளை ஒதுக்கி வருகிறார், ஏன் என்றால் அந்த வேலைத்திட்டத்தில் நாம் கைவைத்தால் றியாழ் அதை தொடர மாட்டார் எனவே அந்த பிரதேசத்தில் அபிவிருத்தியை இவர்கள் செய்வதை தடுக்கலாம் என்ற நோக்கில் செயற்படுகிறார்.
அந்த அடிப்படையில் மீராவோடை அணைக்கட்டு கடந்த உள்ளூராட்சி தேர்தல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவரின் அமைச்சிலிருந்து நிதி ஒதுக்கீடுகளை பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை அறிந்த பிரதி அமைச்சர் அமீர் அலி அவசர அவசரமாக சிறு தொகை பணத்தை ஒதுக்கி அந்த வேலைத் திட்டத்தை தற்போது ஆரம்பிக்கிறார்.

ஆனால் றியாழ் அவர்கள் அரசியல் போட்டியாக அபிவிருத்தியை மேற்கொள்ளாது மக்களின் நன்மை கருதி எடுத்த வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வார் இதில் யார் பெயர் போட்டுக் கொள்ள முற்பட்டாலும் றியாழ் அவர்கள் அதை அலட்டிக் கொள்ளமாட்டார், குறைவான நிதிகளை ஒதுக்கி பாதியளவில் பிரதியமைச்சர் அமீர் அலியால் மேற் கொள்ளப்படும் மீராவோடை அணைக்கட்டு,ஏனைய வீதிகள் என்பன றியாழ் அவர்களின் முயற்சியில் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் அபிவிருத்தி செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -