மச்சான் ஆஷாத் சாலி என் கேள்விக்கு பதில் தருவீர்களா- கல்முனை இப்றாகிம்

அடுத்த பொதுவேட்பாளர் மைத்ரியே - அசாத்சாலி. அப்படியென்றால்... அசாத்சாலி அவர்கள் கீழ்வரும் கேள்விகளுக்கு பதிலளிப்பாரா..? 

>நீங்கள் கொண்டுவந்த மைத்ரி அவர்கள் கிந்தோட்டை, அம்பாரை ,திகன பிரச்சினைகளுக்கு எங்கேயாவது கவலை தெரிவித்துள்ளாரா? அல்லது அந்த இடங்களையாவது நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளாரா? மைத்ரி மரிச்சிக்கட்டியை மறித்துக்கட்டிய கையோடு நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவரை சந்திக்க முற்பட்டபோதும், இதுவரை உங்களால் சந்திக்க முடிந்ததா.? 

>அதற்கான தீர்வையாவது இதுவரை உங்களால் பெற்றுக் கொடுக்கத்தான் முடிந்ததா? மாயக்கல்லில் இனவாதிகளால் சிலை வைத்தபோது அதனை நீக்குவதற்கு பதிலாக, பக்கத்தில் உள்ள முஸ்லிம்களின் காணியை மீட்டுக் கொடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதிய விடயமாவது உங்களுக்கு தெரியுமா? 

>நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை 08.01.2018 அன்று மைத்ரி அவர்கள் முஸ்லிம்களுக்கு கையளிப்பார் என்று நீங்கள் கூறிய கூற்றுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்ற விடயமாவது உங்களின் ஞாபகத்தில் உள்ளதா? முஸ்லிம்களுக்கு சொந்தமான வட்டமடு காணியை வனஇலாகா தன்வசப்படுத்திய விடயத்தை அவருக்கு எத்திவைத்தபோது, பொலநறுவையில் தனக்கும் வனஇலாக அப்படித்தான் செய்கின்றார்கள் என்று ஜனாதிபதியென்ற அதிகாரத்தையே கேள்விக்குட்படுத்திய விடயத்தையாவது நீங்கள் அறிவீர்களா? 

>மூன்று படைபோட்டு தேடிய ஞானசாராவை சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்து பிணையில் விடுவித்த விடயமாவது உங்களுக்கு தெரியுமா? திகன கலவரம் நடந்து ஈரம் காய்வதற்குள் ஜப்பானுக்கு ஞானசாராவை மைத்ரி அவர்கள் அழைத்துச்சென்ற விடயமாவது உங்களுக்கு தெரியுமா? 

>அளுத்கம பிரச்சினைக்கு விசாரணை நடத்தி தீர்வை பெற்றுத்தருவேன் என்று ஆட்சிக்கு வந்த மைத்ரி அதனை செய்தாரா? அல்லது அந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நஷ்டஈட்டையாவது கொடுத்தாரா? 

>வடக்கிழும் கிழக்கிலும் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட முஸ்லிம்களின் எத்தனை ஆயிரம் ஏக்கர் காணிகளை ஜனாதிபதி மைத்ரி அவர்கள் விடுவித்துள்ளார் என்ற விடயமாவது உங்களுக்கு தெரியுமா? ஞானசாராவின் திட்டங்களை மறைமுகமாக செயல்படுத்துவது மற்றுமன்றி, அவரோடு மிக நெருங்கிய நட்பையும் வைத்திருக்கும் மைத்ரி அவர்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாதா? 

>ஞானசாராவின் நெருங்கிய சகாவுக்கு மகியங்கனை அமைப்பாளர் பதவி கொடுத்த சில நாட்களின் பின், அந்த அமைப்பாளரின் மேற்பார்வையில் முஸ்லிமுக்கு சொந்தமான பலலட்சம் பெருமதியான பாட்டா கடை எறிக்கப்பட்டதையாவது நீங்கள் அறிவீர்களா? 

>மைத்ரி அவர்களுடைய நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட கடைகளும், நிறுவனங்களும் இனவாதிகளினால் தீக்கிரையாக்கப்பட்டது அல்லவா?

 >அதற்கு இன்றுவரை கவலையாவது தெரிவித்திருப்பாரா? இலங்கையில் தஞ்சமடைந்திருந்த மியன்மார் அகதி முஸ்லிம்களை இனவாதிகள் துன்பப்படுத்தியபோது மைத்ரி அவர்கள் ஜனாதிபதி என்ற முறையில் வாயையாவது திறந்தாரா? 

>இவருடைய ஆட்சியில் எவ்வளவோ விடயம் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதனையெல்லாம் கண்டும் காணாதவர்போல் நாடகமாடிக் கொண்டிருக்கும் இந்த மைத்ரிதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக உங்கள் கண்களுக்கு தெரிகின்றாரா? 

>அசாத்சாலி அவர்களே.....உங்களுடைய கஜான நிறைந்துவிட்டால் மட்டும் போதாது. சமூகத்தின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும் என்பதையாவது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

எம்.எச்.எம்.இப்றாஹிம்
 கல்முனை...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -