கொய்யா பயிர் செய்கை : மாத வருமானம் 1 லட்சம்

கமால் சப்ரி- 
காலநிலை மாற்றத்தால் நீர்ப்பற்றாக் குறை காரணமாக எமது முதுகெலும்பு பொருளாதாரமாகிய வேளான்மை விவசாயம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் காணி பயிர் செய்கை பண்ணப்படாமல் முடங்கிப் போய் கிடக்கின்றது

எமது பொருளாதாரம் தொடர்பாக மாற்றீட்டு சிந்தனைக்குரிய காலம்

கொய்யா பயிர் செய்யும் ஒரு விவசாயியை சந்தித்தபோது

நான் : "இது எத்தன ஏக்கர் காணி ஐயா ?"

விவசாயி: "4 ஏக்கர் முன்ன எல்லாத்துலையும் வெள்ளாம செஞ்சன் வருமானம் போதாது பிறகு அந்த ரெண்டு ஏக்கர் காணிய சமப்படுத்தி இந்த ரெண்டு ஏக்கர நெறப்பி ஒரு ஏக்கர் ல தென்னையும் மத்த ஏக்கர்ல கொய்யாவும் நாட்டி இருக்கன்"

நான் : "அப்படி என்றால் கொய்யா ஒரு ஏக்கர் ல நாட்டி இருக்கயல்"

விவசாயி : "ஓம் ஐயா"

நான் : "எத்தனை கொய்யா மரம் நாட்டி இருக்கயல்"

விவசாயி : "210 மரம்"

நான் : "இப்ப இந்த மரத்தின் வயது என்ன ?"

விவசாயி: "2 அரை வருடம்"

நான் : "அறுவடை எவ்வளவு நாளுக்கு ஒரு தரம் செய்வயல்"

விவசாயி: "மாதத்துக்கு 2 தரம் காய் அறுவடை செய்வன் சில நேரம் 20 நாளைக்கு ஒரு தடவை"

நான் : "ஒரு தரத்துல எவ்வளவு காய் அறுவடை செய்வயல்"

விவசாயி: "ஒரு தரத்துல 900 - 1000 kg அறுவடை செய்வன்"

நான் : "ஒரு Kg எவ்வளவுக்கு விற்பனை செய்வயல்"

விவசாயி: "70 - 80 ரூபாவுக்கு மொத்த விலைக்கு விற்பனை செய்வேன்"

நான் : "சந்தை எப்படி ?"

விவசாயி: "Call எடுத்து சொன்னா காணிக்கு வந்து காச தந்து வாங்கிக்கிட்டு போவாங்க"

நான் : "இப்ப இதுல எத்தன தடவை அறுவடை செஞ்சிருக்கயல்"

விவசாயி: "19 தடவை"

நான் : "இதுல இருக்கிற பிரச்னை என்ன ?"

விவசாயி: "ஐயோ நல்ல நிம்மதியான தொழில் நம்முட பராமரிப்பிலதான் எல்லாம் இருக்கி"

கணிப்பீடு

அந்த ஒரு ஏக்கரில் மட்டும் இருந்து அவருடைய மாதாந்த வருமானம்

மாதாந்த அறுவடை 900 + 900 = 1800 kg

1 kg கொய்யா 65/=

65 x 1800kg = 117,000 ஒரு லட்சத்தி லட்சத்தி பதினேழாயிரம் ரூபா

செலவு 17,000 போனாலும் ஒரு லட்சம் மாத வருமானம்
(கணிப்பீடு குறைத்து பார்த்துள்ளேன்)

( ரெண்டேக்கர் வெள்ளாமைய செஞ்சி 3 - 4 மாதம் படாதபாடு பட்டு கடைசியா கணக்கு பார்த்தா 10,000 லாபம் இருக்கும்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -