சவூதி அரேபிய இளவரசரைக் காணவில்லை..!

வூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானைக் காணவில்லை என பரவலாகப் பேசப் பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளை அவர் எங்கே இருக்கிறார் ஏன் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.


அத்துடன் சவூதி அரேபியா அண்மையில் இருந்து வித்தியாசமான வேறுபட்ட கருத்துக்களுடன் சட்டங்கள் அமுலாக்குவதுடன் இஸ்லாமிய நாட்டின் கோட்பாட்டில் இருந்து விலகி நடந்து கொள்வதாகவும் அறிவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலக இஸ்லாமிய நாடுகளின் தலமையகமாக கருதப்பட்ட சவூதி அரேபியாவையே இன்று முஸ்லீம்கள் எதிர்க்கும் நிலை மாறியுள்ளன. ஆனால் மக்காவில் இருக்கும் புனித கெளபாவின் புனிதக் கடமைக்காக மாத்திரமே சவூதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டிய நிலையிருக்கிறது..

மேலும் இஸ்லாமியக் கோட்பாடு தெரியாத ஒருவர் இஸ்லாமிய ராம்ராஜியத்தின் இளவரசராவது எவ்வாறு.? அன்னிய கலாச்சாரங்களை உட்புகுத்தும் இளவரசர் சல்மான் இஸ்லாமியக் கோட்பாட்டை முற்றாக குழிதோண்டி புதைக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பது இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் பெரும் கவலையான நிலைப் பாட்டை தோற்றுவித்துள்ளன.

எது எவ்வாராயினும் இஸ்லாமிய நெறிமுறைக்கு மாறாக செயற்படும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டியவரே...ஆனால் இதனை இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமைப்பட்டு செய்யுமா என்றால் அமெரிக்காவின் வால்களாக இருக்கும் இவர்களால் அது முடியாத காரியமாகும்.
இன்று மெளனியாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் நடவடிக்கையால் ஏராளமான மார்க்க அறிஞர்கள் எதுவும் செய்ய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு வேதனைப் பட்டுக்கொண்டிருப்பதனையும் காணக்கிடைக்கிறது.


என்னதான் நடைபெறுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
அட்டாளைச்சேனை
சுலைமான் எல்.முனாஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -