மடத்தடி மீனாட்சி அம்மனின் அற்புதங்கள் மெய்சிலிர்க்கவைக்கின்றன! கும்பாபிசேக ஆரம்பக்கூட்டத்தில் ஆலயத்தலைவர் கோ.கமலநாதன்!

காரைதீவு நிருபர் சகா-
டத்தடி மீனாட்சி அம்மனின் அற்புதங்கள் மெய்சிலிர்க்கவைக்கின்றன. அம்மனின் அருளால் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகின்றனர். வெகுவிரைவில் புதிய ஆலயத்திற்கான கும்பாபிசேகம் நடாத்தப்படவேண்டும். அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை நாடிநிற்கின்றேன்.
இவ்வாறு இலங்கையில் தொன்மைவாய்ந்த நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தலைவர் கோவிந்தசாமி கமலநாதன் வேண்டுகோள்விடுத்தார்.
ஆலயத்தின் நிருவாகசபையினரும் ஆலோசகர்களும் கலந்துகொண்ட கும்பாபிசேகத்திற்கான கால்கோள் இடும் முன்னோடிக்கூட்டம் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை புதிய ஆலய மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
வயல்களால் சூழப்பெற்று மனோரம்மியமான சோலைக்குமத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சிஅம்மனாலய வளாகத்தில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருப்பதை அறிவீர்கள்.

இலங்கையின் மிகவும் மொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பதும் இது சோழர்காலத்தைச்சேர்ந்தது என்றும் எமது முன்னோர் வரலாற்றை ஆதாரம்காட்டிக்குறிப்பிடுவர்.
இங்கு அந்தக்காலத்தில் பலரதும் ஆக்கிரமிப்பு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலின்று இனமதபேதம் இல்லாமல் பலரும் அம்மனைத்தரிசிக்கவருகின்றார்கள்.
கேட்டதைத்தரும் மகாசக்திபடைத்த மீனாட்சிஅம்மனின் அருளால் பலர் பயன்பெற்றுள்ளனர். வாழ்வுசிறந்திருக்கின்றது. பிள்ளையில்லாதவர்களுக்கு அவ்வரம் கொடுத்திருக்கின்றார்.
இங்கு தினமும் பௌத்த இஸ்லாமியசகோதரர்களும் வருகின்றார்கள். பல இஸ்லாமியசகோதரர்கள் ஆலயத்திற்கு உதவியும்வருகின்றார்கள்.

இங்குள்ள புற்றுகளுள் எண்ணற்ற நாகபாம்புகள் உள்ளன. நாம் அழைத்தால் அவை வரும். அப்படி வந்துமிருக்கின்றன. ஆனால் யாருக்கும் தீங்கிழைக்கமாட்டாது.
இந்த ஆலயத்தில் பணியாற்றக்கிடைத்தமையையிட்டு மகிழ்சியடைகின்றேன். ஏளையஆலயங்களிலிருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் இங்கில்லை. இங்கு அனைத்தும் பகிரங்கமே. எந்த ஒளிவுமறைவுமின்றி நிருவாகமியங்குகின்றது. ஏதாவது பிழைகேடு நடந்தால் நாகபாம்பு அவரது சந்ததியையே அழித்துவிடும் என்ற பயபக்தியும் ஒரு காரணமாகும்.

எனவே இங்குள்ள நாம் அனைவரும் இவ்வாலயத்திற்கு பங்களிப்பைச்செய்து கும்பாபிசேகத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். நிதிக்கு குறைவில்லை. அது வரும்.

அம்மனுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி அவள்அருள்பெற்று வாழ்வை வளப்படுத்துவோம். அம்பாறை மாவட்டத்தின் எந்த இந்துவும் இந்த சபையில் அங்கம்வகிக்கலாம் உதவலாம். குறிப்பாக கும்பாபிசேகத்திற்கு அனைவரதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். என்றார்.
ஆலயநநிருவாகசபையின் ஆலோசகர்களான ஓய்வுநிலை அதிபர் வெ.ஜெயநாதன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சட்டத்தரணி எஸ்.சிவரஞ்சித் ஆகியோரும் ஏனைய நிருவாகசபை உறுப்பினர்களும் கருத்துரைத்தனர்.
மாவட்டத்தின் பல தமிழ்க்கிராமங்களையும் சேர்ந்த அம்மன் பக்தர்களை இவ்வாரத்தின் ஒருநாளில் அழைத்து கும்பாபிசேகக்குழுவை அமைத்து கும்பாபிசேகத்தை முன்னெடுப்பதென்று தீhமானமாகியது.
ஆலயநிருவாகசபைச்செயலாளர் கே.சண்முகநாதன் நன்றியுரையாற்றினார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -