வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டே அடுத்த தேர்தலை சந்திப்பேன்!! ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ்

 ல்முனை மாநகர அபிவிருத்திகள் தொடர்பில் பணிகளை ஆரம்பிப்பதற்கான முதற்க்கட்ட விடயங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் வேலைகளை ஆரம்பிப்பதே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், அபிவிருத்தி தொடர்பில் கல்முனை மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதன் பின்னரே தான் பொதுத்தேர்தலை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.

கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதேச அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு கல்முனை மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் 2018-01-19 ஆம் திகதி இடம்பெற்றது.

தற்போதிருக்கும் நல்லாட்சிக்கு அதிஉச்ச ஆதரவை வழங்கிய கல்முனை மக்களை கௌரவிக்கும் நோக்கில் சம்மாந்துறை கல்முனை இணைந்த புதிய நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீமின் அமைச்சுக்கு வரவுசெலவுத் திட்டத்தினூடாக 2000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தினூடாக திட்டங்கள் வரையப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கல்முனையின் மேலதிக அபிவிருத்திக்காக பலத்த முயச்சிகளின் பயனாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியுதவியுடன் “இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தித் திட்டம்” என்ற செயற்திட்டத்தினூடாகவும் பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த செயற்திட்டத்தினூள் கல்முனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதை மிக மகிழ்வுடன் வரவேற்பதாகவும் இதற்க்காக ஒத்துழைத்த உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அந்த அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிரி குறித்த அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுதீன் ஆகியோருக்கும் இந்த திட்டத்தை இங்கு கொண்டுவர அயராது உழைத்த கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத் அலி மற்றும் அவரோடு இணைந்த பணியாள் குழாத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

கல்முனையில் இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தித் திட்டத்தை செயட்ப்படுத்துவதற்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் பிரதம செயலாளருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தினூடாக

01. நகர மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்தல்.

02. போக்குவரத்து முகாமைத்துவம்.

03. நகர வடிகாலைமைப்புத் திட்டம்.

04. திண்மக்கழிவு முகாமைத்துவம்.

05. பொது கட்டிடங்களையும் சந்தைகளையும் மெருகூட்டுதல்.

06. சுற்றுலாத்துறையை மேன்படுத்துவதற்கான உட்கட்டமைப்புப் பணிகளை செய்தல்.

07. உள்ளுராட்சிசபைக்கு உட்பட்ட வீதிகள் பாலங்களை அபிவிருத்தி செய்தல்.

08. குடியிருப்பு மற்றும் தொழில் நிலையங்களின் உட்கட்டமைப்பு.

09. கழிவு நீரகற்றல்

போன்ற திட்டங்களுக்கு குறித்த 1900 மில்லியங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

அதேவேளை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்துப்பிரிவு ஒன்றை அமைப்பதற்க்கு 1000 மில்லியன் ரூபாய்களும் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்க்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

கல்முனையை விளையாட்டு வசதிகள் கொண்ட நகரமாக மாற்றும் திட்டத்தின்கீழ் சந்தாங்கேணி மைதானத்துக்கு 450 மில்லியன் ரூபாய்களும் சாய்ந்தமருது மைதானத்தை தேசிய விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வதுடன் மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் நற்பட்டிமுனை போன்ற பிரதேசங்களிலுள்ள மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

கிராமிய பாதைகளை அமைப்பதற்க்கு 2000000.00 ரூபாய்களை பிரதமர் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் உலக வங்கியின் உதவியுடன் பெரிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இன ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப்பகுதிகளும் சமனான முறையில் அபிவிருத்திகள் செய்யப்படும் என்று தெரிவித்த ஹரீஸ்,தேசிய ஒருமைப்பாட்டு 120 மில்லியன் ரூபாய்கள் செலவில் மருதமுனை முதல் மாளிகைக்காடு வரை வீதிகள் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தாங்கள் விரைவில் வெளியிடவுள்ள தேர்தல் விஞ்ஞாபணத்தினூடாக அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் மற்றும் பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ. பாவாவும் மாநகரசபையின் உயர்மட்ட உத்தியோகத்தர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -