கடலில் மூழ்கி மரணித்த ஒலுவில் இப்றாகிமின் ஜனாசா இன்று கண்டெடுப்பு-படங்கள்



ஒலுவில்  அமீர் -

வெளிநாட்டில் வேலை செய்து விட்டு ஊர்வந்து நான்கு நாட்களில் ஒலுவில் கடலில் மூழ்கி மீனவர் ஒருவர் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் இரவு வேளையில் மீன் பிடிக்கச் சென்றுவந்த மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒலுவில் நான்காம் பிரிவைச் சேர்ந்த அபூசாலி இப்றாஹீம் (39) என்பவரே மரணமடைந்தவராவார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது நேற்று 07.12.2017 வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் படகொன்றில் மீன் பிடிக்கச் சென்று கரையை நோக்கி படகைச் செலுத்திய போது அப்பாரிய கடல் அலைக்குள் படகு சிக்குண்டு விபத்துக்குள்ளானதில் நான்கு பிள்ளைகளின் தந்தையான அபூசாலி இப்றாஹீம் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

இவருடன் சென்ற மற்றைய மீனவர் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளார். காணமல் போனவரை தேடும் பணியில் ஒலுவில் துறைமுக கரையோரப் பாதுகாப்பு கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் பொதுமக்களும் சுழியோடிகளும் ஈடுபட்டு வந்தனர்.

இவரது சடலம் ஒலுவில் துறைமுக வெளிச்ச வீட்டுக் அருகாமையில் பாரிய கடல் அலையை தடுப்பதற்காக போடப்பட்ட பாரிய பாராங்கற்களுக்குள் இருந்து இன்று 2017.12.08ம் திகதி காலை 11.30 மணியளவில் கனரக இயந்திரங்களைக் கொண்டு பாராங்கல்லை அகற்றி சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது விடயமாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவருடன் அக்கரைப்பற்று நீதாவான் நீதிமன்ற நீதிபதியும் ஸ்தலத்துக்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -