அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் உடனே வெளியேற வேண்டும்

அப்துல் லத்தீப்-

தொகுதி வாரி தேர்தல் முறையின் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டால் முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் படுகுழியில் தள்ளப்படுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை கருவறுக்க ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த சதித்திட்டத்திற்கு துணை போக வேண்டாமென முஸ்லிம் எம்பிக்களிடம் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

நல்லாட்சியின் இந்த துரோகச் செயலுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் வெளியேற வேண்டுமென சமூகத்தின் பெயரால் கேட்கின்றோம். 

மர்ஹூம் அஷ்ரப் எமது சமூகத்திற்கு பெற்றுத்தந்ந உரிமையை பேரின கட்சிகள் கபளீகரம் செய்வதற்கு தயவு செய்து கை உயர்த்தாதீர்கள் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் தொகுதி வாரியில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் ஒரேயொரு முஸ்லிம் முதலமைச்சரையும் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ள கிழக்கையும் நாம் தாரைவார்த்த வரலாற்று துரோகத்தை புரிந்தவர்களாவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -