அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான உள்ளீர்ப்பு - மீண்டும் கால எல்லை

கஹட்டோவிட்ட ரிஹ்மி -
முன்னைய அரசாங்கங்களால் வெவ்வேறு பதவிப் பெயர்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட சகலரையும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு (Absorption) எமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறு உள்ளீர்ப்பு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் சில பட்டதாரிகள் அதற்கு இணங்கியிருக்கவில்லை. சுய விருப்பத்தின் அடிப்படையில், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான உள்ளீர்ப்பு செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்க நிர்வாக அமைச்சு எடுத்திருந்தது, பட்டதாரிகளின் நலவிற்காகவாகும். 

விசேடமாக ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு பதவிப்பெயர்களைப் பாவித்து, அவ்வப்போதைய கால இடைவௌிகளில் நியமனங்கள் வழங்கியதால், பட்டதாரிகள் மற்றும் அரசு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட பதவிக்கு முறையான சேவைக் குறிப்பிக்கள் இல்லாமையும் அதனால் பதவியுயர்வு கிடைக்காமை, சம்பள அதிகரிப்பு கிடைக்காமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் பெருகியுள்ளன. 

இது சம்பந்தமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில், தொழில் புரியும் பட்டதாரிகள் பலர் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் அவர்கள், தற்போது நடைமுறையிலிருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இவர்கள் அனைவரையும் உள்ளீர்ப்பு செய்யும் பிரச்சினைக்கு உற்பத்தித்திறனே தீர்வாகும் என்று கூறினார். அதன் பயனாக, இதுவரை காலமும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்பு (Absorption) செய்வதற்கான விருப்பத்தை தெரிவிக்காத தொழில் புரியும் பட்டதாரிகளுக்கு மற்றுமொரு கால எல்லையை வழங்குவதற்கு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்களின் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றுநிருபத்தின்படி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதற்கு வழங்கப்பட்ட இறுதித் தினமானது 2016.05.31 ஆகும். எனினும் அதற்குள் உள்ளீர்ப்பு செய்வதற்கான விருப்பத்தை தெரிவிக்காதவர்கள், ஆயினும் சேவைக்குறிப்பு செல்லுபடியாகும் திகதியான 2011.08.01 இல் மத்திய அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டிருந்து, MN4 (A) திட்டத்தில் சம்பளம் பெறும் பட்டதாரி ஊழியர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான விருப்பத்தை தெரிவிப்பதற்கு இச் சுற்று நிருபம் மூலம் மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

அதே போன்று MN4 (A) சம்பளத்திட்டத்திட்டத்தின் கீழ் சம்பளம் பெறும் பட்டதாரிகளின் தொழில் 2011.08.01 திகதி மாகாண அரச சேவையில் இருந்து மற்றும் அரசாங்க நிர்வாக சுற்று நிருப இலக்கம் 16/2010 (I) இன் படி, மத்திய அரசின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ​சேவைக்கு இடமாற்றம் பெற்று வந்து சேவையில் இருக்கும் ஊழியர்களுக்கும் உள்ளீர்ப்பு செய்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இவை அனைத்திற்குமான இறுதித் திகதி 2017.09.30 வரையாகும். 

இச்சுற்றுநிருபத்தின் படி, தற்போதைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ள மற்றும் தெரிவிக்க எதிர்பார்த்திருக்கும் பட்டதாரிகளுக்கு, தமது கோரிக்கையை இரத்துச் செய்யும் சந்தர்ப்பம் கிடையாது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -