அமைச்சர் ஹக்கீம் மாத்தறைக்கு விஜயம்..!

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த வியாழக்கிழமை (01) நேரடி விஜயம் மேற்கொண்டார்.

வெலிப்பிட்டிய பள்ளிவாசல், அக்குரஸ்ஸ பள்ளிவாசல், மீதெல்லவல விகாரை, பொரதொட போதிருக்காராம விகாரை மற்றும் மாத்தறை, கொடப்பிட்டிய சாதாத் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்த பின்னர் நிதியுதவிகளையும் வழங்கிவைத்தார்.

இதேவேளை, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அனர்த்த நிவாரண செயலணி மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் சுத்தம்செய்யப்பட்டு வருகின்றன. இப்பணியில் ஈடுபடுவதற்காக யாழ்பாணம், கிளிநொச்சி, வவுனியா, குருநாகல் உள்ளிட்ட நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்த 1000 மெத்தைகளை அக்குரஸ்ஸ பள்ளிவாசல், கொரதொட விகாரை போன்றவற்றுக்கு பகிர்ந்தளித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -