இறக்காமத்தில் தொடரும் புத்தகுருமாரர்களின் அத்துமீறல் - களத்தில் அமைச்சர் நஸீர், ஆரிப்சம்சுடீன்

டந்த இரு தினங்களாக இறக்காம மாயக்கல்லி சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்ததுடன் சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்ததுடன் புத்தசமயம் தொடர்பான கட்டிடமொன்றை நிர்மாணிக்க முற்பட்டிருந்தனர். இது தொடர்பாக நேற்றைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது..

எனினும் நிறுத்தப்படமால் தொடர்ந்தும் பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று அங்கு கூடிய பிரதேச மக்கள் அவ் குழுவினறுக்கு பாரிய எதிரப்பினை தெரிவித்ததோடு உடனடியாக நிர்மாணப்பனிகளை நிறுத்துமாறு கூறியும் தமது நியாய பூர்வமான கண்டனத்தை தெரிவித்தனர். 

இச்செய்தி அறிந்தவுடன் உடனடியாக அவ்விடத்தில் பிரசன்னமானதோடு நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து இதற்கான தீர்வினை பெறும் நோக்கில் கிரமமாக செயற்பட்டதோடு அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்த பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் இவ் அத்துமீறல் தொடர்பான நிலையினையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன் ஆகியோர் தெளிவுபடுத்தினர். 

சம்பவ இடத்தில் ஊர்ப்பெரியார்கள் அரசியல் பிரதிநிதிகள் உலமாக்கள் சட்டத்தரணிகள் இளைஞர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து இவ் அத்துமீறல் நடவடிக்கை தொடர்பான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். இதனை உடன் தீர்வினை பெறும்பொருட்டு இன்று தமனை பொலிஸ் நிலையத்தில் சம்பந்தபட்டவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் ..




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -