பிரதி அமைச்சர் பைசால் காசிமிடம் சபாநாயகர் கேட்ட கேள்விக்கு விடையளிக்கையில்..!

2017.03.21 செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் டெங்கு சம்மந்தமாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களிடம் சபாநாயகரால் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கையில்.. 

நிலையியற் கட்டளை 23/2இன் கீழ் கேட்கப்படும் வினா 2017.03.21

இவ்வருடத்தின் 2017.03.20ம் திகதி ஆகும் போது நாட்டில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் 22,562 கண்டறியப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 1,619 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயினால் மரணம் அடைந்தவர்கள் 16 என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் மரணித்தவர்கள் 46 ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் திகோணமலை, கிண்ணியா, மூதூர், உப்புவேலி ஆகிய சுகாதார மருத்துவ அதிகார பிரிவுகள் அவதானத்துக்குரிய பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிக்கை இடப்பட்ட டெங்கு நோயாளர்கள் என சந்தகிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை 1,385 ஆகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணத்தினால் இந்நோய் பரவியது பொதுவான ஒரு காரணமாக உள்ளது.

1. 2016ம் வருட இறுதியில் இருந்து அடிக்கடி பெய்த சிறிய மழையின் காரணத்தினால் வருட ஆரம்பத்தில் இருந்த நோயாளர்கள் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளனர்.

2. மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளினூடு முறையாக கழிவுகள் முறையாக அகற்றப்படாத காரணத்தால் நுளம்புகள் பெருகுதல்

3. மழைகாலத்தில் சூழலில் உள்ள நீரை தேக்கி வைக்கும் நீர்த்தாங்கிகளில் நுளம்புகள் பெருகுதல்.

4. பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்கள் காணப்படுதல். (பூச்சியியல் தரவுகளுக்கு அமைய பரீசீலித்த 25 பாடசாலைகளில் 11 பாடசாலைகளில் நுளம்பு குடம்பிகள் இருந்தமை.

டெங்கு தொற்று தன்மையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைள்

1. உரிய மாவட்டத்தில் நோய் அவதானிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல்.

2. பதிவு செய்யப்பட்ட நோயாளர்களிடம் உடனடியாக விசாரித்து உரிய பிரதேசத்தில் நுளம்பு பெருகும் இடங்களை ஒழித்தல்.

3. பூச்சியியல் ஆய்வு தரவுகள் மற்றும் நோய் அவதானிப்பு தரவுகளுக்கு அமைய தொற்றும் தன்மையை இனங்கண்டு யுடுடுநுசுவுளு மூலம் அவதானம் தொடர்பாக மாவட்ட அலுவலர்கள் நாளாந்தம் தெளிவுபடுத்தல்

4. சகல பாடசாலைகளும் விடுமுறைக்கு முன்னரும் பின்னரும் நுளம்புகள் பெருகும் இடங்களை நீக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல்

5. சகல பாடசாலைகளிலும் நுளம்பு குடம்பிகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அழித்தல்.

6. அவதானத்துக்குரிய பிரிவுகளில் மற்றும் அதிகளவு நோயாளர்கள் பதிவாகும் பிரதேசங்களில் ரெக்வண்டிகளில் பொருத்தும் புகையிடும் இயந்திரம் மற்றும் கைகளினால் இயக்கும் புகை இயந்திரத்தின் மூலம் புகையூட்டல்.

7. கைவிடப்பட்ட கிணறுகளுக்கு குடம்பி அழிப்பு மருந்து இடுதல்.

8. அவதானத்துக்குரிய பிரதேசங்களில் உள்ள சகல சுற்றுப்புறங்களையும் பரிசோதித்து நுளம்பு பெருகும் இடங்களை அழித்தல்.

9. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் 150 குழுக்களை இட்டு இம்மாதம் 22ம் திகதியில் இருந்து 28ம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல்.

நோயாளர்களை முகாமைத்துவப்படுத்தல்

கிண்ணியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவை அமைத்தல். (180இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்குதல்) தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்கள் 17ம் அவற்றுக்கு தேவையான உபகரணங்களும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு அனுப்புதல்.

·பிற வைத்தியசாலைகளில் இருந்து மற்றும் பொது விஷேட மருத்துவ குழுக்கள் மற்றும் தாதியர் குழுக்களை அனுப்புதல்.

·நோயாளர்களை கூடிய சீக்கிரத்தில் இனம் காண்பதற்கு ஸ்கேன் இயந்திரம் வழங்குதல்.

இன்புளுவன்சா நோய் தொடர்பாக தெளிவுபடுத்தல்

கடந்த இருமாதங்களுக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. பொதுவாக வருடத்தின் நவம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிகமான இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அறிக்கையிடப்படுவதுடன் இவ்வருடத்தில் அது ஏனைய வருடங்களையும் விடவும் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் காரணத்தால் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில் 8 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இம் மரணங்களில் அதிகமானோர் வேறு நீண்டகால நோய் நிலமைகள் என்பதுடன் அதில் இருவர் கர்ப்பிணித்தாய்மார்கள் ஆகும். வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடும் போது மார்ச் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைவை வடக்க, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் சகல பிரதேங்களிலும் அறிக்கை இடப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கிடைக்க பெற்ற சளி மதிரிகள் 2192 இல் 693க்கு (32மூ) இன்புளுவன்சா யு எனவும் 119 (5மூ)இன்புளுவன்சா டீ எனவும் ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தவிர இந்தியா, மாலைதீவு போன்ற தெற்காசிய நாடுகளிலும் இக்காலத்தில் இன்புளுவன்சா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை காட்டுகின்றது.

அறிக்கையிடப்பட்ட நோயாளர்களில் பெரும்பாலானோர் இன்புளுவன்சா யு குழுவிற்குரிய ர்ஐNஐ ளுநயளழயெட இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கள்ளானவர்கள் என தற்போது மேற்கொள்ளப்பட் ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு பன்றிக் காய்ச்சல் எனும் பெயரில் அறிமுகமான இன்புளுவன்சா வைரஸ் தொற்று தற்காலத்தில் இன்புளுவன்சா யு ர்ஐNஐ தொற்று எனும் பெயரில் குறிப்பிடப்படுகின்றது.

இவ் வைரஸ் கடந்த பல வருடங்களாக இலங்கையில் பெருகி காலத்துக்கு காலம் எமக்கு சாதாரண தடுமல் காய்ச்சல் போன்றல்லாது குடர1 பெருக்கும் நோய் காவுகை வைரஸ் என்பதுடன் அது புதிய வைரஸ் ஒன்றல்ல.

இந்த இன்புளுவன்சா வைரஸ் மூலம் ஏற்படுத்தக்கூடிய பொதுவான தடிமல் காய்ச்சல் அல்லாத குடர1 நோய் நிலமையில் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளை காட்டுவதுடன் பொதுவாக சிகிச்சைகள் வழங்கப்படாமலே குணமடைகின்றது. ஆனாலும் சிலருக்கு விஷேடமாக 65வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டுவயதுக்கு குறைந்த குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்கள் மற்றும் நீண்டகால இருதய நுரையீரல், சிறுநீரகம், நீரழிவு நீர் போன்ற நோய்களினால் பாதிப்புற்ரோர்களுக்கு இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறான நோயாளர்கள் கூடிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் நோய் அறிகுறிகளில் தோவது வித்தியாசம் அல்லது மூச்சு விடுவதற்கு கஷ்ரப்படின் அவர்களை உடனடியாக வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய நோய் எதிர்ப்பு ஒளடதங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் மற்றும் அவசியமான அறிவூட்டல்கள் வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

நோய் பெருகுவதை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த சுகாதார பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படுவதுடன் எந்நேரமும் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கைகளினால் மூக்கை தொடுதல் தவிர்க்க வேண்டும்.

இந் நோய் சாதாரண நோய் நிலைமையில் புதிய வைரஸ் ஒன்றின் மூலம் ஏற்படும் ஒன்றல்ல என்பதுடன் இதை மக்களுக்கு பயமூட்டும் வகையில் செயற்படுத்தக்கூடாது. இதை தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -