மஹிந்த வீதியில் தலைகீழாக நின்றாலும் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் - பொதுபலசேனா

ளுத்கம இனக்கலவரத்தை கோதாபாயதான் தூண்டினார் என்று ராஜித சேனரத்தின அவர்கள் கூறியது மட்டுமல்ல அதற்குறிய ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறியுள்ளார்.

அந்த ஆதாரங்களை தன்னுடைய அரசியல் நலனுக்கு பாவிக்கின்றாரா?
அல்லது முஸ்லிம்களை உசுப்பேற்ற பாவிக்கின்றாரா?
அல்லது அவ்வப்போது மஹிந்தவை மிரட்டுவதற்கு பாவிக்கின்றாரா?
என்பது, ராஜிதவுக்கும் படைத்த இறைவனுக்கும்தான் வெளிச்சம்.

அதே நேரம் பொது பல சேனாக்காரர்களும் இப்போது கூறுகின்றார்கள், இந்த கலவரத்தை பின்னால் இருந்து இயக்கியது முன்னால் ஆட்சியாளர்கள்தான் என்று. அவர்களின் இந்த கூற்றைப் பார்க்கும் போது, தங்களுடைய உண்மையான நண்பர்கள் இவர்கள்தான் என்று காட்டுவதை போல் உள்ளது. 

அதே போன்று, மஹிந்த ராஜபக்சவும், கோதாபாய ராஜபக்சவும் பகிரங்கமாகவே கூறியுள்ளனர், இந்த இனவாதத்தின் சூத்திரதாரிகள் சம்பிக்க ரணவக்கவும், பொதுபலசேனாவுன்தான் என்று. அதனை கண்டுகொள்ளாமல் விட்டது நாங்கள் செய்த தவறுதான் என்றும் மிக பகிரங்கமாகவே அறிவித்துள்ளனர். கோதபாய ராஜபக்ஸ சொல்கின்றார், இந்த பொது பலசேனா என்ற இனவாதிகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்வும் இல்லையென்று, அப்படி தொடர்பிருந்தால் விசாரணை செய்து நிரூபியுங்கள் என்றும் சவால் வேறு விட்டுள்ளார்.

முஸ்லிம்களையும் எங்களையும் பிரிப்பதற்கு மேற்குலகுடன் சேர்ந்து இந்த சம்பிக்க ரணவக்க, பொதுபல சேனாவை சேர்ந்த ஞானசார போன்றவர்கள் செயல்பட்டு வந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இப்போது சம்பிக்க ரணவக்க, பொதுபலசேன, சிங்கலே, ராஜித போன்றவர்கள் எங்கே தஞ்சம் அடைந்துள்ளார்கள் என்பதை மக்கள் அறியவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரம் பொதுபலசேனைாவை சேர்ந்த பிக்கு ஒருவர் கூறுகின்றார், பாராளுமன்ற வீதியில் ஒரு வருடத்துக்கு மஹிந்த தலைகீழாக நின்றாலும், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்க மாட்டார்களென்று அவ்வளவு உறிதிப்பாட்டோடு கூறுகின்றனர், முஸ்லிம் மக்களை அந்தளவு நாங்கள் மஹிந்தவுக்கு எதிராக மாற்றியுள்ளோம் என்று கூறுவது போன்றுள்ளது அவரின் கூற்று.

இப்போது மஹிந்தவும், இனவாதிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனவாதிகளை தன்பக்கம் வைத்திருக்கும் நல்லரசாங்கம் மஹிந்தவுக்கு எதிராக ஏன் இதை பயன்படுத்த தயங்குகின்றது.

அப்படியானால் இந்த நல்லரசாங்கம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு ஏன் பின்னிற்கவேண்டும். இந்த இனவாதிகளை இயக்கியது மஹிந்த என்றிருந்தால், விசாரணை நடத்தி அவரை குற்றவாளியாக்க இந்த அரசாங்கம் பின் நிற்பதன் நோக்கம் என்னவென்றும் புரியாமல் உள்ளது.

மஹிந்தவை ஏதாவது ஒன்றில் மாட்டவைத்து அரசியலில் இருந்து அவரை ஓரம்கட்ட துடித்துக்கொண்டிருக்கும் இந்த நல்லரசாங்கம். அதனை ஏன் இன்னும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.

ராஜித சேனாரத்ன அவர்கள் அது சம்பந்தமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறுகின்றார், அப்படி அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை வைத்தே மஹிந்த மீது நடவடிக்கை எடுக்க எத்தனை நேரம் எடுக்கும் அவர்களுக்கு.

இப்போது நல்லரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, பொதுபலசேனா, சிங்கலே போன்றவர்களை அரச சாட்சியாக மாற்றி மஹிந்தவையும், கோதாபாயவையும் சட்டத்தின் முன் குற்றவாளியாக்கி, முஸ்லிம்களிடமிருந்து நிரந்தரமாக அவர்களை பிரித்து விடுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருந்தும், இந்த நல்லாட்சி இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதன் நோக்கம் என்னவென்று புரியாத புதிராகவே உள்ளது.

மஹிந்தவை பழி வாங்கிவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, தாஜுதீன் கொலை வழக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், பல உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பலத்த சேதத்தை விளைவித்த இந்த விடயத்துக்கான ஆதாரங்களையும், சாட்சிகளையும் கைவசம் வைத்திருப்பதாக கூறும் இந்த நல்லரசாங்கம், ஏன் மஹிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகின்றது என்று தெறியவில்லை.

இப்படியான சந்தர்பங்கள் அவர்களுக்கு சார்பாக இருந்தும், அத்தனை இனவாதிகளும் தங்கள் பக்கம் இருந்தும், இந்த நல்லரசாங்கம் அளுத்கமை கலவரத்துக்கு நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வந்து வெளிக்காட்டாது விட்டால்,  இந்த இனவாதிகளை பின்னாலிருந்து இயக்குவது மேற்குலகமும், அதன் ஏஜண்டான சம்பிக்க போன்றவர்களுமே என்று, மஹிந்த சொல்லும் விடயம் உண்மை என்றே ஆகிவிடும்.

மஹிந்த குறிப்பிடும் அத்தனை இனவாதிகளும் நல்லாட்சியின் அரவணைப்பிலேயே இப்போதும் இருந்து வருகின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். உண்மையில் விசாரணை ஒன்று நடைபெற்றால் இந்த இனவாதிகளுக்கு பின்னால் இருப்பது நாங்கள்தான் என்ற உண்மை வெளியாகி விடும் என்ற பயமும் இவர்களுக்குல் இருக்கலாம்.

ஆகவே, இனவாதிகளின் பின்னால் இருப்பது நல்லரசாங்கமா?
அல்லது மஹிந்தவா? 
என்பதை கண்டறியக்கூடிய அளுத்கம விசாரணைக்கு இவர்கள் ஆர்வம் செலுத்தாமல் இருப்பதை கொண்டே புரிந்து கொள்ளலாம் இவர்களும் அதற்கு துணை போகின்றவர்கள்தான் என்று.

ஆட்சியையும், அதிகாரத்தையும், சாட்சிகளையும், இனவாதிகளையும், கையில் வைத்திருக்கும் இந்த நல்லரசாங்கத்துக்கு அதில் உண்மைகள் இருக்கமாக இருந்திருந்தால் இந்த நேரம் அவர்களே அதனை பூதாகரமாக்கி மஹிந்தவை பழிவாங்கி இருப்பார்கள். ஆகவே, உண்மையான என்னம் இதில் அவர்களுக்கு இருக்குமாக இருந்தால் அவர்கள் விசாரணை நடத்தி உண்மையை உலகுக்கு காட்டவேண்டும்.

அப்படி நடக்கவில்லையானால்........?
இந்த நல்லரசாங்கமே இந்த இனவாதிகளின் பின்னால் இருக்கும் சதிகாரர்கள் என்பது ஊர்ஜிதமாகும்..
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -