கரவாகு இலக்கியச் சந்தியின் இரண்டாம் சந்திப்பு...!

ரவாகு கலை இலக்கியச் சந்தியின் இரண்டாவது சந்திப்பு நேற்றய தினம் (25.09.2016) மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, கவிஞர் Dr. நஜீமுத்தீன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்றைய கரவாகு கலை இலக்கியச் சந்திக்கு பிரதம விருந்தினராக SARO FARMS (PVT) ltd இன் முகாமைத்துவ பணிப்பாளரும், கவிஞருமான எம்.எச்.எம். தாஜுதீன் கலந்து சிறப்பித்தார்.

மேலும், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பூர்வாங்க செலவுகளுக்கென இன்றைய கரவாகுச் இலக்கிய சந்தியில் கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினரும், SARO FARMS (Pvt) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளரும், கவிஞருமான எம்.எச்.எம். தாஜுதீன் அவர்கள் இரண்டு இலட்சம் பணத்தினை மாநாட்டுக் குழுவின் செயலாளர், மூத்த எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

இலக்கிய அதிதிகளாக மூத்த கவிஞர்களான மணிப்புலவர். மருதூர் ஏ. மஜீத், அஷ்ரப் சிஹாப்தீன், சோலைக்கிளி, பாவேந்தல் பாலமுனை பாரூக் ஆகியோருடன் தென்னிந்தியாவிலிருந்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருச்சி சாஹுல் ஹமீதும் வருகை தந்து நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர். நிகழ்வில் சிறப்பு அதிதிகளால் திருச்சி சாஹுல் ஹமீது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இன்றைய கரவாகு சந்தியில் முதலாவது அமர்வு பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு அரங்காக பரிணமித்தது. தலைவர் அஷ்ரப் இலக்கிய முகமும், நினைவுகளும் எனும் தலைப்பில் இலக்கிய ஆய்வாளரும், எழுத்தாளருமான ஜெஸ்மி எம். மூஸா சிறப்புரையாற்றினார். கரவாகின் சிரேஷ்ட பாடகர் முஹம்மத் மாஹிர் மற்றும் இ.ஒ.கூ. அறிவிப்பாளர் ரோஷன் அஷ்ரப் ஆகியோர் தலைவர் அஷ்ரப் நினைவை உரசும் பாடல்களை பாடி சபையை நெகிழ்ச்சி அடையச் செய்தனர். 

மேலும், இடையிடையே கவிதைப் பொழிவுகளில் கவிஞர்களான எழு கவி ஜெலில், அக்கரைப்பற்று நாளீர், காத்தான்குடி பயாஸ், கல்முனை நபீஸா மபாஸ் ஆகியோர் பங்கேற்று அருமையாக கவிதை வாசித்தனர். இதனைத் தொடர்ந்து பாவேந்தல் பாலமுனை பாரூக் குறும்பாக்கள் தொடர்பாக விசேட உரை நிகழ்த்தினார்.

இன்றைய கரவாகு கலை இலக்கியச் சந்திப்பின் இரண்டாவது அமர்வில் மறைந்த கவிஞர் எஸ்.எம்.எம்.ராபீக் அவர்களின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷடிக்கப்பட்டது. மர்ஹும் ராபீக் அவர்களின் இலக்கிய நினைவுகளை அவரின் சகோதரர் கவிஞர் எஸ்.எம்.எம்.அமீர் பகிர்ந்து கொண்டார். மூத்த எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் சிறப்புரையிலும் கவிஞர் ராபீக் தொடர்பான ஞாபகங்கள் பகிரப்பட்டமை விசேட அம்சமாகும்.

கரவாகு சந்தியின் சிறப்புக் கவியரங்கம் நிகழ்வின் முத்தாய்ப்பு. அந்த வகையில், கவிஞர் வே.முல்லைத்தீபன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான மருதமுனை விஜிலி, பொத்துவில் கிராமத்தான் கலீபா, காத்தான்குடி யூனூஸ், ரியாஸ், பாலமுனை முபீத், மசூரா சுஹுருதீன் ஆகியோர் பங்குபற்றி சுவாரஷ்யமாக கவி மழை பொழிந்தனர்.

இன்று இடம்பெற்ற கரவாகுச் சந்தியின் அனைத்து நிகழ்ச்சிகளும் 97.6 ஊவா சமூக வானொலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வரும் வாரங்களில் ஒலிபரப்பாகவிருக்கின்றமை விசேட அம்சமாகும். இன்றைய நிகழ்வு நடைபெற்ற மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்தும் இங்கு கருத்துக்கள் முன் மொழியப்பட்டன.

முதற்கட்டமாக பாடசாலை நூலகத்திற்கு சில கவிஞர்களின் நூல்களும் அதிபர் முஹம்மத் அஸ்மி அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன. அடுத்த கரவாகு இலக்கியச் சந்தியின் சந்திப்பும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திலேயே நடைபெறும்.

இன்றைய கரவாகு இலக்கிய சந்திப்பிற்கு அலைபேசி மற்றும் முக நூல் அழைப்பிதழை மாத்திரம் ஏற்று வருகை தந்து கலந்து சிறப்பித்த அனைத்து பிரமுகர்கள், புத்திஜீவிகள், கலை இலக்கிய சொந்தங்கள் அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
ஜனூஸ் சம்சுதீன்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -