முதலமைச்சர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி

கிழக்கு மாகாண #முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால், அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு #ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜப்பானின் நகோயா ஹில்டன் ஹோட்டலில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது, “கிழக்கு மாகாண முதலமைச்சர் – கடற்படை அதிகாரி இடையிலான முரண்பாட்டை எப்படிப் பார்க்கின்றீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

“உண்மையைச் சொல்வதென்றால் இலங்கையின் நிர்வாகத்தினர் மத்தியில் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதொன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த விடயத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால், அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்தார் போன்ற பொய்யான செய்திகளை – திட்டமிட்ட செய்திகளை கடும்போக்குத் தரப்பினர் பரப்புவது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதகமல்லவா? என்று ஜனாதிபதியிடம் வினவியபோது,

“முதலிலே எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஏன் அங்கு போனார் என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அங்கு சந்திப்பொன்றுக்குப்போன எதிர்க்கட்சித் தலைவரிடம் தங்கள் காணிகளை வந்து பார்க்குமாறு மக்கள் கூறியதனாலேயே அவர் முகாமுக்கு சென்றிருக்கின்றார்” என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -