மஹிந்தையின் திட்டம் இதுதான் - போட்டுடைத்தார் நாலக்க தேரர்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த பாய ராஜபக்ஷ ஆகி­யோ­ருடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் ஒன்­றி­ணைந்து இரா­ணு­வத்­தி­னரை யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து பாது­காக்கும் வகையில் பத்து இலட்சம் கையெ­ழுத்து வேட்டை ஒன் றினை முன்னெ­டுக்­க­வுள்­ளனர்.

எதிர்­வரும் எட்டாம் திக­தி­முதல் இந்த போராட்டம் நாட­ளா­விய ரீதியில் முன்னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இரா­ணுவ வீரர்­களை யுத்தக் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து பாது­காக்­கவும், நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அரா­ஜ­கத்­தன்­மை­யான விட­யங்­களை எதிர்த்தும் நாடு தழு­விய ரீதியில் பத்து இலட்சம் கையெ­ழுத்துக்களை சேக­ரிக்கும் வித­மாக இப்­போ­ராட்டம் அமை­ய­வுள்­ள­தாக இரா­ணுவ வீரர்­களை பாது­காக்கும் இயக்­கத்தின் செய­லாளர் வணக்­கத்­துக்­கு­ரிய பென்­க­முவ நாலக்க தேரர் தெரிவித்தார்.

கொழும்பு சம்­புத்­தா­லோக விகா­ரையில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட் டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் கூறு­கையில்,

இந்­நாட்டில் இரா­ணுவ வீரர்­களின் நலன் தொடர்பில் யாரும் கண்­டு­கொள்­வ­தில்லை.

முப்­பது வருட கால யுத்­தத்­தினை நிறைவு செய்து மக்களின் சுமூ­க­மான வாழ்­வுக்கு இவர்­களே கார­ண­மாவர். ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் இரா­ணுவ வீரர்­களை சிறைக்கு அனுப்ப முயல்­கின்­றது. குறித்த அரா­ஜக தன்­மை­யான விடங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் நாடு­த­ழு­விய ரீதியில் கையெ­ழுத்து வேட்­டை­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

பத்து இலட்சம் கையெ­ழுத்­துக்­களை பெறும் வகையிலான போராட்டம் எதிர் வரும் 8 திக­தி­யன்று கொழும்பு புகையி­ரத நிலை­யத்­திற்கு முன்பு ஆரம்­ப­மாகும்.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, கோத்த­பாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொள்ளவுள்­ளனர்.

இரா­ணுவ வீரர்­களை பாது­காக்கும் வகையில் மக்­களின் ஆத­ர­வோடு குறித்த கையெ­ழுத்துப்பெறும் நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -