கசிந்தது யோசித்தவின் கைதுக்கான பிர­தா­ன காரணம்..!

சி.எஸ்.என். தொலைக்­காட்சி அலை­வ­ரிசை ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்ட கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்டம் (Money Laundering Aact) சட்­டத்தின் கீழான குற்­றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் மகன் லெப்­டினன் யோஷித்த ராஜ­ப­க்ஷவை கைது செய்ய குறித்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் மின்­னஞ்சல் ஆதா­ரங்­களே பிர­தா­ன­மாக இருந்­த­தாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

சி.எஸ்.என்.நிறு­வ­னத்தின் தீர்­மா­னங்கள் எடுக்கும் ஏக நப­ரா­கவும் தலை­வ­ரா­கவும் யோஷித்த ராஜ­ப­க்ஷவே செயற்­பட்­டுள்ளார் என்­பதை அந்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் மின்­னஞ்­சலை விஷேட ஆய்­வு­க­ளுக்கு உட்­ப­டுத்­திய போதே தெரி­ய­வந்­த­தா­கவும் அதன் அடிப்­ப­டை­யி­லேயே அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் கைது செய்­யப்­பட்ட ஏனைய நால்­வரில் வெலி­விட்ட, திஸா­நா­யக்க மற்றும் பெர்­ணான்டோ ஆகியோர் அந்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் ஆரம்ப பணிப்­பா­ளர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளதும் நிஸாந்த ரண­துங்க பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யாக செயற்­பட்­டுள்­ளதும் உறு­தி­யான நிலை­யி­லேயே அந்த நிறு­வ­னத்தின் ஊடாக இடம்­பெற்ற பணத் தூய்­மை­யாக்கல் சட்­டத்தின் கீழான குற்­றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் என அவர்­களும் பெய­ரி­டப்­பட்­ட­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள, யோஷித்த உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் வெளியே இருப்­பது பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­ப­தா­லேயே அவர்கள் தண்­டனை சட்டக் கோவையில் 32 மற்றும் 109 (5) ஆகிய அத்­தி­யா­யங்கள் ஊடக விசா­ரணை செய்ய பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு உள்ள அடிப்­படை பொறுப்­புக்கு அமைய கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

குறித்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்தை நிறுவ 234 மில்­லியன் ரூபா ஆரம்ப மூல­த­ன­மாக முத­லீடு செய்­யப்பட்­டுள்­ள­துடன் அந்த முத­லீட்டு மார்க்­கங்­களைக் காட்ட தலைவர் உள்­ளிட்ட பணிப்­பா­ளர்­களால் இய­ல­வில்லை எனவும் பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

வெளி நாட்­டி­லி­ருந்து சட்ட விரோ­த­மாக நிறு­வனம் ஒன்­றூ­டா­கவே சி.எஸ்.என். இற்­கான முத­லீ­டுகள் செய்­யப்பட்­டுள்­ளமை ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன் அடிப்­ப­டை­யி­லேயே பணத் தூய்­மை­யாக்கல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­ட­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்த குற்றச் சாட்­டுக்கு மேல­தி­க­மாக போலி ஆவ­ணங்­களை தயா­ரித்தல், திட்­ட­மிட்ட நம்­பிக்கை துரோகம், திட்­ட­மிட்ட மோசடி, சுங்க சட்­டத்தை மீறி­யமை மற்றும் நிறு­வன சட்­டங்­களை மீறி­யமை ஆகி­யன தொடர்­பிலும் அர­சாங்க சொத்­துக்­களை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்ப­ட­வுள்­ளது.

விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­ததும் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யவும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என பொலிஸ் பேச்­சாளர் தெரி­வித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -