சீருடை கூப்பன்களின் பெறுமதி இதோ...!

அஷ்ரப் ஏ சமத்-
ல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக, நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிப்பாளா்கள், மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும் கூட்டம் இன்று (27) கல்வியமைச்சில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும் தெரிவித்தனா்.

இந்தக் கூப்பண் முறை வலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது. 

டிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் பதிவு செய்யப்பட்ட புடவைக்கடைகளில் சீறுடைகளை கொள்முதல் செய்ய முடியும். மிகுதி பண்திற்கு தமக்குத் தேவையான கால்அனி, பெனியன்களையும் பெற்றுக் கொள்ளமுடியும். 

சீருடை துணி 15 வகையில் பின்வரும் பெறுமதியில் வழங்ககப்படுகின்றது.

1-5 மாணவா்கள் 450 ருபா,

1-5 மாணவியா்கள் 400 ருபா

1-5 மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா

1-5 மாணவியா்கள் பாவாடை மற்றும் மேற்சட்டை 720 ருபா

6-9 மாணவா்கள் மேற்சட்டை மற்றும் காற்சட்டை 525 ருபா

6-9 மாணவியா்கள் 500 ருபா

6-9 முஸ்லீம் மாணவியா்கள் 700 ருபா

6-9 மாணவியா்கள் பாவடை 800

10-13 மாணவா்கள் 525 ருபா 

10-13 மாணவா்கள் 525 ருபா

10-13 கவுன் துணிக்காக 600

10-13 முஸ்லீம் மாணவியா்கள் 800 ருபா

10-13 மாணவியா்கள் -பாவடை 1000 ருபா

1-7 துறவற காவி உடை 1300 ருபா

8-13 துறவற மாணவா்கள் 1700 ருபா 

இங்கு உரையாற்றிய கல்விய அமைச்சா் இலங்கை யில் உள்ள 43 இலட்சம் மாணவா்களது சீறுடைகள் விடயத்தில் கடந்த காலத்தில் 4 நிறுவனங்கள் பாரிய மாபியா நிதி மோசடிகளை செய்தது. இதனை இலகுபடுத்தும் திட்டமாகவே பிரதமந்திரி, ஜனாதிபதி அமைச்சரவை அனைவரும் ஏற்றுக் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படப்படுகின்றது. இதனை குழப்பிய பல்வேறு அசெகரியங்களை செய்வதற்கு இந்த 4 நிறுவணங்கள் பல்வேறு மாபியாக்களை ஆரம்பித்துள்ளன. இதற்காக 26000 மில்லியன் ருபா ஒதுக்கீடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் துணிவழங்கிய நிறுவனத்தின் 1 மீட்டா் துணிக்கு 165 ருபா பக்கட் பன்னுவதற்கு 8 ருபா போக்குவரத்த்தும் மற்றும் செலவுக்கு 16 ருபா அறிவிடப்பட்டது. 

65-35 வர்க்க வகை கொண்ட வெள்ளைத்துணியை நமது பிரதேசத்தில் கடையில் துணியை கொள்வனவு செய்யமுடியும். அந்த துணிக்கடையை வலயக் கல்விப்பணிப்பாளா் அனுமதி வழங்கப்படல் வேண்டும். எனவும் கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -