அழிவு ஆரம்பம் - நடுக்கத்தில் அமெரிக்கா

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அபூர்வ ஜோதிடரான நாஸ்டர்டாமஸ், உலகில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பற்றி கூறியவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுவரை உலகில் நடக்கவிருக்கும் கொலைகள் மற்றும் அழிவுகளை மட்டுமே அவர் அதிகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள இவரின் கணிப்பின்படி இதுவரை சுமார் 3000 கணிப்புகள் இதுவரை ஒன்றன்பின் ஒன்றாக நடந்துள்ளது.

இந்நிலையில், Pastor Ricardo Salazar என்பவர் இனி உலகில் நடக்கவிருப்பவை குறித்து கணித்துக்கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு முன்னர் இவர் கணித்துக் கூறியவை நடந்ததா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது இவரின் கணிப்புகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இவரின் கணிப்புகள்:-

1. வரவிருக்கின்ற 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அகதிகளின் நெருக்கடியால் ஐரோப்பா தனது எல்லையை மூடிவிடும்.

2. 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீன நாடு ஜப்பான் மீது தாக்குதல் நடத்தும்.

3. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக தெரியும். ஒவ்வொரு இரவும் அது பெரிதாகிகொண்டே இருக்கும். அதற்கு முன் ரஷ்யா ஒரு எரிகல் வரும் என்பதை உறுதிபடுத்தும்.

4. மே 15 முதல் 17 -2016: போர்டோ ரிகோ உள்ளூர் நேரப்படி காலை 2.20 மணிக்கு 5.6 மைல் அளவுள்ள விண்கல் பூமியில் மோதும். இதனால் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும் இதனால் உலகில் பலியானவர்களின் எண்ணிக்கை 120 கோடியாக உயரும்.

5. இதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டோன் உள்பட உலகம் முழுவதும் எரிமலை வெடிக்கும், அதன் சாம்பல் சூரிய ஒளி பூமியில் படாதவாறு மறைத்து விடும். பிறகு ஒருவருடம் பனிகாலமாகமாறும். கலிபோர்னியாவின் பெரும் பகுதி காணாமல் போகும்.

6. 2016 ஆம் ஆண்டு யூன் 16 ஆம் திகதி அமெரிக்க பலவீனமாகும். ரஷ்யா மற்றும் சீனா 3 ம் உலகப்போரை தொடங்கும்.

7. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் திகதி ரஷ்யா-சீனா கூட்டணி 3-வது உலகப்போரில் வெற்றி பெறும்.

8. 2018 இறுதி அல்லது 2019 ஆரம்ப கட்டத்தில் ரஷ்யா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும்.

9. 2020 கிறிஸ்துக்கு எதிரானவர் வருகையால் உலகம் முழுவதும் அவர்களது ஆளுகையின் கீழ் செல்லும்.

10. 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து இரட்சிப்பின் இரண்டாம் காலம் தொடங்கும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -