இறந்­து­விட்­ட­தாக கருதி அடக்கம் செய்­யப்­பட்ட பெண் சவப்­பெட்­டி­யி­லி­ருந்து கூச்­ச­ல் (Video)

றந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்டு கொங்­கி­றீட்­டா­லான கல்­ல­றையில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட இள­வ­யது கர்ப்­பிணிப் பெண் ஒருவர், ஒரு நாள் கழித்து தனது சவப்­பெட்­டி­யி­லி­ருந்து உதவி கோரி கூச்­ச­லிட்ட சம்­பவம் ஹொண்­டூ­ரஸில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் அதிர்ச்­சி­ய­டைந்த உற­வி­னர்கள் கல்­ல­றையை உடை த்து நேஸி பெரஸ் (16) என்ற மேற்­படி யுவ­தியை மீட்டு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்ற போதும், அவ­ரது உயிரைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் இறந்து விட்­ட­தாக தெரி­வித்­தனர். இத­னை­ய­டுத்து அவ­ரது சடலம் ஏற்­க­னவே புதைக்­கப்­பட்ட அதே கல்­ல­றையில் மீண்டும் புதைக்­கப்­பட்­டது.

நேஸி பெரஸ் கல்­ல­றைக்குள் தனது சவப்­பெட்­டியின் கண்­ணா­டி­யா­லான மூடியை உடைத்துத் திறக்க முயற்­சித்­தமை கார­ண­மாக அவ­ரது கைளில் சிராய்ப்புக் காயங் கள் ஏற்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

மேற்கு ஹொண்­டூ­ர­ஸி­லுள்ள லா என்­ரடா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 3 மாத கர்ப்­பி­ணி­யான நேஸி பெரஸ், சம்­பவ தினம் இரவு தனது வீட்­டிற்கு வெளியில் இருந்த மல­ச­ல­கூ­டத்­துக்கு சென்ற போது மயக்­க­ம­டைந்து விழுந்­துள்ளார்.

அந்தப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தால் ஏற்­பட்ட சத்­தங்­களைக் கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்தே அவர் மயங்கி விழுந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அந்தப் பெண்ணின் வாயி­லி­ருந்து நுரை வெளித் தள்­ளி­யதால் அவ­ரது பெற்றோர் அவரை தீய ஆவி பீடித்­துள்­ள­தாக கருதி தமது மக­ளுக்கு என்ன நேர்ந்­தது என்­பதைக் கண்­ட­றிய உள்ளூர் மத­கு­ரு­வொ­ரு­வரை வர­வ­ழைத்­து ள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அந்த மத­குரு அவரைப் பீடித்­துள்ள ஆவியை விரட்­டு­வ­தாக கூறி மதச் சடங்­கு­களை மேற்­கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் அந்தப் பெண்ணின் உடல் இயக்­கங்கள் ஸ்தம்­பி­த­ம­டைந்­ததால் அவரை அவ­ரது குடும்­பத்­தினர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர். அங்கு அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் இறந்து விட்­ட­தாக தெரிவித்தனர்.

மறுநாள் தனது மனைவியின் கல்லறைக்கு விஜயம் செய்த அவரது கணவர், அந்தக் கல்லறைக் குள் இருந்து வெளிப்பட்ட தனது மனைவியின் கூச்சல் சத்தத்தை செவிமடுத்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்தே அந்தக் கல்லறையை தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -