45 அமைச்சர்கள் ,20இரா­ஜாங்க அமைச்சர்கள், 30 பிரதியமைக்கர்கள் - 4 ஆம் திகதி சத்­தியப்பிர­மாணம்

தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் எதிர்­வரும் 4 ஆம் திகதி சத்­தியப் பிர­மாணம் செய்து கொள்­ள­வுள்­ளனர். அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளாக 45 பேர் நிய­மனம் பெற­வுள்­ளனர். 

மேலும் 20 இரா­ஜாங்க அமைச்­சர்­களும், 30 பிர­தி­ய­மைச்­சர்­க­ளு­மாக மொத்தம் 95 அமைச்­சர்­களை உள்­ள­டங்­கி­ய­தாக புதிய அர­சாங்கம் அமை­ய­வுள்­ளது. 

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள 15 அமைச்சு பத­வி­களும் இரா­ஜாங்க மற்றும் பிர­தி­ய­மைச்சுப் பத­விகள் 17 உம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

இதே­வேளை நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்­டத்­துக்கு அமைய அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சுப் பத­விகள் 30 க்கு மட்­டுப்­ப­டுத்தப் பட்­டுள்­ளது. அமைச்சுப் பத­வி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டு­வது தொடர்­பாக மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் விவா­த­மொன்­றி­னையும் கோரி­யுள்­ளது. 

நிதி , கல்வி, பெருந்­தெ­ருக்கள், ஊடகம், சுகா­தாரம், பெருந்­தோட்­டத்­துறை, நீர்­வ­ழங்கல், நீர்­வளம், மெகா பொலிஸ், முத­லீட்டு அபி­வி­ருத்தி, தென் மாகாண அபி­வி­ருத்தி, ஆகிய அமைச்­சுக்கள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கும், போக்­கு­வ­ரத்து, சிவில் விமான சேவை, மின்­சக்தி, விவ­சாயம், நீர்­பா­சனம், பெற்­றோ­லியம், கைத்­தொழில், உயர்­கல்வி, அர­ச­நிர்­வாகம், சமுர்த்தி, அனர்த்த முகா­மைத்­துவம் ஆகிய அமைச்­சுக்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. 

இதே­வேளை பாது­காப்பு, மகா­வலி மற்றும் சுற்­றாடல் அமைச்­சுகள் ஜனா­தி­ப­தியின் மேற்­பார்­வையின் கீழ் இருக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. vi
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -