வித்தியா மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள்!

துறையூர் எ.கே மிஸ்பாஹுல் ஹக்-
வுனியா பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் இலங்கை மக்கள் அனைவரினையும் இன,மத,மொழி வேறுபாடுளிற்கு அப்பால் கவலை கொள்ளச் செய்துள்ளது. இம் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று பலரும் களம் இறங்கியுள்ளனர். 

இம் மாணவியின் மரணத்திற்கு நீதி கிட்ட வேண்டும் என்பதில் மாற்றுப் பேச்சிற்கு இடமில்லை. குறித்த மாணவி காணாமல் போய் விட்டதாக குறித்த மாணவியின் பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்த போது பொலீசார் “இம் மாணவி யாருடனாவது ஓடிப் போய் இருக்கலாம்” என்ற விதத்தில் பதில் அளித்துள்ளமை இன்று போலீசார் மீது அதீத விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் ஒரு இளம் பெண்ணையோ, இளம் ஆணையோ காணவில்லை என்றால் ஓடிச் சென்று பொலிசாரினால் கண்டு பிடித்து விட முடியாது என்பதனை எம் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொலிசாரிடம் இவ்வாறான பிரச்சனைகள் வரும் போது இது பற்றி விசாரணை செய்வார்கள் “இன்றைய கால கட்டத்தில் காதல் கருமாதிகள் அதிகம் உள்ளதால்” பொலிசாரினது முதற் பார்வை அங்கே தான் செல்லும். அது பொலிசாரின் மீதுள்ள பிரச்சினை அல்ல. தற்போதைய சமூக சீரழிவின் பிரச்சினை. தன் பிள்ளை நல்ல பிள்ளை என்று அப் பிள்ளையின் பெற்றோர் நம்பலாம் பொலீசார் அவ்வாறு நம்பி விசாரணை நடாத்த மாட்டார்கள். இவ் விடயத்தில் பொலிசாரினை குறை கூறுவதனை விட எம் கலாச்சாரப் போக்கினை குறை கூறுவது பொருத்தமாக அமையும்.எமது கலாச்சாரத்தினை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இவ் மாணவிற்கு நீதி வேண்டி பலரும் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். இவ் ஆர்ப்பாட்டத்தால் ஒன்றுமே விளையப்போவதில்லை. இம் மாணவியின் மரணத்தின் பிற்பாடு வாட மாகாண ஆளுநர் பாராட்டும் அளவு போலீசார் தங்கள் கடமையினை செய்துள்ளனர். நிலமை இவ்வாறு இருக்க ஆரசியல் ஆதாயங்கள் இன்றி இவ் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் தான் என்ன? 


பொலீசார் தங்கள் கடமையினை செய்யாது போனால் ஒரு அழுத்தம் வழங்க ஆர்ப்பாட்டம் செய்யலாம் அதனை மறுப்பதற்கு இல்லை. பலரும் விழிப்பாய் உள்ள போது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இவ் ஆர்பாட்டங்கள் பயனற்றது என்பதனை விளக்க மாணவி வித்தியாவிற்காய் ஒரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நான் கண்னுற்ற ஆர்ப்பாட்டத்தினை கூறுவது போருத்தமாக அமையும் என நினைக்கின்றேன். இவ் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 30 மாணவர்களிடம் கூட ஒரு உணர்ச்சி பூர்வமான செயற்பாட்டினைக் காண முடியவில்லை.கடுமையாக கூக்குரல் இட்ட மாணவன் முன்னிற்கு ஆவேசமாக காணப்பட்டார் மறுபக்கம் வந்து சிரிக்கிறார். ரோட்டில் சென்ற பஸ்ஸின் மீது அடிக்கிறார்கள்.இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியுமாக உள்ள விடயம் குறித்த ஆர்ப்பாட்டம் செய்பவர்களிடையே கூட குறைந்தது இது பற்றிய ஒரு விழிப்புணர்வு கூட வரவில்லை என்பதாகும். தாங்களும் செய்தோம் என்று இணையங்களிலும் பத்திரிகைகளிலும் பதிவிட்டால் அது தான் அவர்கள் சாதனை எனலாம். எனவே, இவ்வாறான ஆர்ர்ப்பாட்டம் என்ன இலாபத்தினைத் தரப் போகிறது?

இம் மாணவியினை கசக்கி வீசிய காமுகர்களின் வாக்கு மூலத்தில் “வா மச்சான் ஒரு பிள்ளை மாட்டிருக்கி” என தென் இந்திய திரைப்படப் பாணியில் தன் சகாக்களினை அழைத்துள்ளார்கள். இது அந்தப் பகுதியில் கலாச்சாரம் எந்தளவு சீர் கேட்டில் உள்ளது என்பதனை அறியப் போதுமாகும். மேலும்,இக் கூற்று இப் பெண் மாத்திரம் சிதைக்கப்பட வில்லை இவர்களின் பொறியில் அகப்பட்ட பல பெண்களினை பகிர்ந்து உண்டுள்ளார்கள் 

இவ் காமுகக் கயவர்கள் என்பதனையும் புலனாக்குகிறது.

வித்தியாவினை பாடசாலை விட்டும் நேரம் கழிந்தும் காணவில்லை என அறிந்தவுடனே தான் பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். தனது குமருப் பெண் தனித்து செல்கிறாள். அவள் பாடசாலை சென்று விட்டாளா? என பெற்றோர் கவனத்துடன் விசாரிக்கும் ஏதாவது ஒரு வழி முறையினைக் கொண்டிருக்க வேண்டும். பாடசாலை சென்று விட்டாளா என உறுதிப்படுத்த தவறிய பெற்றோரும் ஒரு வழியில் குற்றவாளிகளே! அதே போன்று வழமையாக பாடசாலை வரும் மாணவியினை ஒரு நாள் காணவில்லை என்றால் குறித்த ஆசியர்கள் அது பற்றி விசாரணை செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது.இதற்குத் தவறிய ஆசிரியர்களும் குற்றவாளிகளே! குறிப்பாக பெண் பிள்ளைகள் மீது அதிக கவனம் எடுக்க வேண்டிய கடப்பாடு அவர்களிற்கு உள்ளதல்லவா?.

கிடைக்கப் பெறுகின்ற தகவல்களினை வைத்துப் பார்க்கும் போது இம் மாணவி பாடசாலை செல்லும் பகுதி சன நடாமாற்றம் அற்ற பகுதியாகவும் காடுகள் அமையப்பெற்ற இடமாகவுமே காணப் படுகிறது என்பதை அறியலாம்.இவ்வாறான பகுதிகளில் தனது பிள்ளையினை அனுப்பும் பெற்றோர்கள் அதிக கவனம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று கூட்டி வருவது இயலாத காரியமாக இருப்பினும் அப் பகுதியில் செல்லும் மாணவர்களினை ஒன்றிணைத்து ஒரு குறித்த மாணவியின் பெற்றோர் அழைத்துச் செல்லல் போன்ற ஏதாவது ஒரு முறையில் செயற்படுவது இவ்வாறான பிரச்சினைகளினை ஓரளவு தவிர்க்கும் அல்லவா..??

இஸ்லாம் ஒரு பருவம் அடைந்த பெண்ணினை ஆண் துணையின்றி பயணம் செய்யத் தடை செய்கிறது. அது ஏன் என்று இப்போது புரிகிறதா..?? இஸ்லாம் பெண்ணினை போகப் பொருள் ஆக்காமல் இருக்க உடம்பினை மறைக்க கட்டளை இடுகிறது. அது ஏன் என்று இப்போது புரிகின்றதா..?? இக் குற்றம் நிகழ்ந்தவுடன் அனைவரும் இக் குற்றவாளிகளுக்கு பகிரங்கமாக மரண தண்டனை வழங்குமாறு கூறுகின்றனர்.பாராளுமன்றத்தில் கூடபிரதியமைச்சர் விஜகலா கூறியுள்ளனர். பலரின் விமர்சனத்திற்குள்ளான இச் சட்டம் ஏன் என்று புரிகின்றதா? இஸ்லாத்தினை இவர்கள் உரிய முறைப்படி பின் பற்றி இருப்பின் கூட இதனைத் தடுத்திருக்கலாம்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -