சிறுபான்மை மக்களின் நிறங்கள் தேசியக்கொடியிலிருந்து நீக்கப்பட வேண்டும்- ஞானசார

சிறுபான்மை மக்களின் இருப்பை அடையாளப்படுத்தும் வகையிலான நிறங்கள் தேசியக்கொடியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று தனது மே மாத குழறுபடிகளை ஆரம்பித்துள்ளார் இனவாத பொது பல சேனா அமைப்பை வழி நடாத்தும் பயங்கரவாதி ஞானசார.

ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு நிறம் கொடுத்தால் இந்தியாவுக்கு தேசியக்கொடியே இருக்காது எனவும் தெரிவிக்கும் அவர், இலங்கை தேசியக் கொடியிலிருந்து நிற அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இக்கொள்கையைக் கடந்த வருடம் பிரஸ்தாபித்து ஞானசாரவின் தூண்டுதலாலேயே சிங்ஹலே எனும் தேசத்துக்கான கொடி விவகாரம் தலையெத்ததும் ஆசிய பிராந்தியத்தையே பௌத்த – இந்து பிராந்தியமாகப் பிரகடனம் செய்ய இந்தியப் பிரதமர் மோடியின் உதவியை நாடப்போவதாகவும் அறிவித்து தமது உச்ச கட்ட செயற்பாடுகளைக் கட்டவிழ்த்திருந்த நிலையில் 80 லட்ச ரூபா செலவில் மியன்மாரின் அசின் விராதுவுக்கு விழா எடுத்து, மஹிந்த ராஜபக்சவை தமது தலைவராக அறிவித்து அவரை தோற்கடித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், பொது பல சேனா குறித்து தகுந்த விசாரணைகளை நடாத்தாது விட்டது தனது பிழையென மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதும் ‘வெட்கத்துக்குரிய’ விடயம் என தெரிவித்துள்ள ஞானசார ஒரு நாட்டின் தலைவராக இருந்தவர் அப்படிச் சொல்வது தமக்கிழைக்கும் பாரிய துரோகம் எனவும் தெரிவித்துள்ளமையும் அண்மையில் முன்னாள் பங்காளிகள் இருவரும் தமது சண்டை நாடகத்தை ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சோ.. ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -