அன்வர் இஸ்மாயிலின் மரணத்திற்கான காரணம் என்ன?மைத்திரி ஆட்சியில் சந்தேகம் நீக்கப்பட வேண்டும்

எஸ்.எம்.தல்ஹா-

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தருணத்தில் இதனை அறியவிழைவது சிறந்தவிடயமாகும் ஏனெனில் அன்வர் இஸ்மாயிலின் மரணத்தை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவசரமாக நிரப்பியது பசில் ராஜபக்சவின்மூலமே. விகிதாசார தேர்தல் முறையின் மிகப்பெரிய குறைபாடு பட்டியலில் தெரிவு செய்யப்பட்டவரை தவிர தோல்வியடைந்து அடுத்த இடத்தில் இருப்பவர் முன்னிருப்பவரை கொலை செய்து விட்டால் அதிகாரத்தை அடையமுடியும்.

இந்த நிலைதான் அன்வர் இஸ்மாயிலின் தேசியபட்டடியலுக்கும் ஏற்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் அவர் இறந்த காலத்தில் பேசிக்கொண்டனர். மக்களுக்கு தன்னால் முடியுமானதை விரைவாக செய்ய வேண்டும் எனும் அரசியல் விவேகியாகவே அன்வர் இஸ்மாயில் காணப்பட்டார் ஆனால் அவர் தனது வாழ்வின் பயணத்தை எம்மிடமிருந்து விரைவாக முடித்து கொள்வார் என்று நாம் யாரும் அறியவில்லை.

தற்போதைய நல்லாட்சியில் பல அரசியல் கொலைகளுக்கான சூத்திரதாரிகள் இனங்காணப்படுகின்றனர். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் கொலைகளில் மர்மமாக இருப்பவர்கள் வெளிக்கொணரப்படுகின்றனர். 

அது போல்; அன்வர் இஸ்மாயிலின் மரணத்தின் பின்னணியில் ஒரு சந்தேகம் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட ஆலோசகராக கடமையாற்றிய அவரின் சகோதரரர் பசில்ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லாமல் அமைச்சர்கள் மீதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் அமைச்சின் செயலாளர்கள் மீதும் எல்லை கடந்து தலையீடு செய்கிறார் என்ற விமர்சனம் அப்போதிருந்தது. 

அக்காலப்பகுதியில் பசில்ராஜபக்ஷவை அவசரமாக பாராளுமன்றம் கொண்டு செல்லவேன்டிய தேவை ராஜபக்ச குடும்பத்திற்கு அவசியமானதாக இருந்தது. இதற்காக தேசியப்பட்டியலில் இருக்கும் யாரையும் பலி கொடுக்க அப்போதய அரச குடும்பம் தயாரானது. 

அக்காலப்பகுதியில் பசில்ராஜபக்ச மீது இருந்த பெரிய விமர்சனம் நூற்றுக்கு பத்து வீதம் என்பதாகும் ஏன் பசில் பாராளுமன்றம் சென்ற போது எதிர்கட்சி உறுப்பினர்கள் நூற்றுக்கு பத்து வீதம் என்றுதான் அவரை வரவேற்றார்கள் இப்படியான காலப்பகுதியில்தான் அன்வர் இஸ்மாயில் மரணத்தை தழுவினார். 

அன்வர் இஸ்மாயிலின் மரணச் சான்றிதழை பெறுவதற்கு மரணம் நிகழ்ந்து ஓரிரு நாளில் அன்வர் இஸ்மாயிலின் மனைவி வைத்தியசாலைக்கு ஆள் அனுப்பிய போது இறப்புச் சான்றிதழை வேறு நபர்கள் பெற்றுச் சென்றிருந்ததாக அறியக்கிடைத்திருந்தது.

அன்வர் இஸ்மாயிலின் மரணத்தில் அரசியல் ரீதியாக அதிக ஆர்வம் காட்டியிருக்கவேண்டியவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவாகும்; அவ்வாறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று அன்வர் இஸ்மாயிலுக்கு நெருங்கியவர்கள் குறிப்பிடுகின்றனர். 

2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மற்றும் சம்மாந்துறை தொகுதி அன்வர் இஸ்மாயில் இரண்டு பேரையும் வைத்துத்தான் அதாஉல்லாவின் தேர்தல் வெற்றிக்கான வியூகம் திட்டமிடப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அம்பாரை மாவட்டத்தில் கல்முனை தொகுதியில் ஹரிஸ் போட்டியிடுவதும் பொத்துவில் தொகுதியில் அதாஉல்லா களமிறங்குவது அன்வர் தேசியபட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வது இந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிக்கப்பட்டவர்தான்; அன்வர் இஸ்மாயில்.

அத்தேர்தலில் அன்வரின் செல்வாக்கினால் அதிகமான வாக்குகள் அதாஉல்லாவிற்கு கிடைத்தது ஹரிஸ் தோல்வி அடைந்து அரசியலில் சற்று பின்னடைவை சந்தித்தார். 

சுதந்திரம் அடைந்த காலப்பகுதியிலிருந்து சம்மாந்துறையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்து வந்துள்ளார். 

திடீரென ஏற்பட்ட அன்வர் இஸ்மாயிலின் மரணம், சம்மாந்துறை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தது. இந்தப்பதவி சம்மாந்துறை பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டும் என்று மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். 

உடனடியாக இதனை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்யாத அதாஉல்லா, காலம் தாழ்த்தி மஹிந்தவை சந்திக்கவேண்டும் அன்வர் இஸ்மாயிலின் தேசியப்பட்டியல் விடயம் தொடர்பாக பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மஹிந்தவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு அதாஉல்லா சென்ற போது அங்கே பசில் ராஜபக்ச வரவழைக்கப்பட்டிருக்கின்றார். 

அதாஉல்லாவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு தேசியபட்டியல் தொடர்பாக பேசத்தொடங்கிய போது மஹிந்த கேட்டிருக்கின்றார் பசிலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகொடுப்பது தங்களுக்கு விருப்பமில்லையா அதாஉல்லா? என்று கேட்டதாக அந்த காலப்பகுதியில் பத்திரிகையாளர் லூசியன் ராஜகருணநாயக்க எழுதியதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தம் எனநினைக்கிறேன். 

இதன் பிறகு எந்த நடவடிக்கையும் அதாஉல்லா எடுக்கவில்லை இந்த விடயங்களை நாம் அவதானிக்கும் போது அன்வரின் மரணத்திற்கு பின்னால் பலரால் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் இருக்கின்றதா? என எண்ணத்தோன்றுகின்றது. 

அன்வர் இஸ்மாயில் என்னும் சமுகமனிதனின் ஆத்மா நம்மில் இன்றும் வாழ்வதால் அவரின் மரணத்தின் இரகசியங்களை நாம் அறிய எம்மை அதுதான் தூண்டுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -