ஐ.நா மனித உரிமைச் சபையில் அம்பலமாகியது சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம்!

னித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால் மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமை சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.

தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து இடம்பெற்றிருந்த உபமாநாடொன்றிலேயே இவ்விவகாரம் பேசப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் மத உரிமைகளுக்கான சிறப்பாய் (special rapporteur)Heiner Bielefeldt அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டில் , சிறிலங்கா, இந்தியா , வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து கருத்தாளர்கள் அந்தந்த நாடுகளின் நேரடிச் சாட்சியங்களாக பங்கெடுத்துள்ளனர்.

போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச கட்டமைப்பின் ஓர் ஆயுதமாக, மேலெழுந்துவரும் பௌத்த பேரினவாதிகளின் வன்முறைகள், தமிழ் மொழி பேசுகின்ற அனைத்து மக்களது மத சுதந்திரத்துக்கும், அவர்களது வழிபாட்டு உரிமைகளுக்கும் எதிராக தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த உப மாநாடு இடம்பெற்றுள்ளது.

மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தலக்கள் உடல்ரீதியிலான நேரடி வன்முறைகள், பாலியல் வன்முறைகள், கொலைகள், சமூக புறக்கணிப்புகள் ,ஒன்றுகூடுவதற்கான தடைகள், வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான உரிமை மறுப்புகள், கருத்துரிமைகள் என மத சுதந்திரத்துக்கான அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி இந்த உப மாநாட்டில் கருத்துப்பரிமாறப்பட்டுள்ளது.

இந்த உப மாநாட்டில் சிறிலங்கா விவகாரமே அதிகம் பேசப்பட்டுள்ளமையானது, ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பின் சிங்கள பௌத்த பேரினவாதம், அனைத்துலக அரங்கில் அம்பலமாகி வருகின்றமையினையே எடுத்துக் காட்டுவதாக, இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த உப மாநாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வன்முறைகள் அகண்ட திரையில் காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளது.

முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த வேள்வித்திருவிழாவுக்கு உள்ளுர் அரச செயலகத்திடம் அனுமதி பெற வேண்டுமென்ற விவகாரம், மற்றும் மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களால் நிறுத்தப்பட்ட விவகாரம் ஆகியன தொடர்பிலும், ஐ.நா மனித உரிமைச்சபையின் மத வழிபாட்டு சுதந்திரத்துக்கான சிறப்பு பிரதிநிதி Heine Bielefeldt கவனத்துக்கு http://world.einnews.com/pr_news/222245911/hindu-prayers-cancelled-in-sri-lanka-due-to-government-threats-tgte  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சமீபத்தில் சென்றிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.
                             
வீடியோ ----> 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -