கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சர்கள் மாற்றம்!



பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று (03) மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இன்று (03) காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோவின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சுக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் த.வி.கூ, ஸ்ரீ.மு.கா, ஐ.தே.க, ஐ.ம.சு.கூ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர்களாக: 


  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.ஐ.எம்.மன்சூர் மீண்டும் சுகாதார அமைச்சராகவும்
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பாக வீ.தண்டாயுதபானி கல்வி அமைச்சராகவும், 
  • துரைராஜசிங்கம், விவசாய அமைச்சராகவும், 
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சி சார்பாக, ஆரியபதி கலபதி வீதி அபிவிருத்தி அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
  • மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக சந்திரதாச கலபதியும், 
  • பிரதித் தவிசாளராக தமிழ் விடுதலைக் கூட்டணி சார்பாக பிரசன்னா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -