தேசிய காங்கிரஸ் மாநாட்டில் குழப்பம் எஸ். எம் . சபீஸ் மாநாட்டை விட்டு வெளியேறினார்!

எம்.ஹிம்றாஸ்-
தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லாவுக்கும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர் சபீசுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கட்சி மாநாட்டை விட்டு சபீஸ் வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.

தேசிய காங்கிரஸ் கட்சியின் 11வது மாநாடு இன்று காலை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் முக்கியஸ்தரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் கலந்து கொண்டிருந்தார்.

கட்சியின் உயர்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டபோது, அந்த சந்தர்ப்பத்தில் சபீஸ் மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளியேறியுள்ளார். சபீஸ் மாநாட்டிலிருந்து வெளியேறியதற்கான காரணம், தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடத்திற்கு குறிப்பிட்ட சிலரே தொடர்ந்தும் நியமிக்கப்படுவதுடன், அதிகாரத்தில் உள்ள தரப்பிற்கு சந்தர்ப்பம் வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாகும்.

அத்தோடு உயர்பீடத்திற்கு நியமிக்கப்படுகின்றவர்கள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு தலையை ஆட்டுகின்றவர்களாகவே இருந்து வருகின்றனர். இன்று அமைச்சர் அதாஉல்லாவுக்கு அக்கரைப்பற்றில் ஆதரவு குறைந்துள்ள நிலையில் இவ்வாறு கட்சியின் உயர்பீடத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளவர்களை சேர்த்துக் கொள்ளாமல் புறக்கணிப்பது எதிர்காலத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி பாரிய தோல்வியை சந்திக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கட்சி முக்கியஸ்ர் சபீஸ் அக்கரைப்பற்றில் மக்கள் மத்தியில் தெளிவான ஆதரவைப் பெற்றுள்ளவர் என்பதுடன் தேசிய காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -