சகோதரரின் இறுதிக்கிரிகையில் பங்கேற்காத ஜனாதிபதி ;இது வேண்டுமென்றே?

மது சகோதரரின் மரண இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதை ஜனாதிபதி வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஜனாதிபதியின் சகோதாரர் பிரியந்த சிறிசேன, கடந்த வாரம் நண்பர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணமானார்.

இதன்போது ஜனாதிபதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்தநிலையில் குறித்த விஜயம் மார்ச் 28ம் திகதி முடிவடைந்தது.

எனினும் நேற்று மாலை சகோதரரின் இறுதிக்கிரியை பொலநறுவையில் இடம்பெறும் வரையில் அவர் நாடு திரும்பவில்லை.

எனினும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட ஜனாதிபதியுடன் சென்ற ஏனைய அதிகாரிகள் நாடு திரும்பிவிட்டனர்.

ஏற்கனவே 2012ம் ஆண்டு ஒக்டோபரில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மைத்திரிபால சிறிசேன, சுற்றாடலுக்கு ஊறு விளைவிக்கும் தமது சகோதரரை பிணையில் எடுக்கமுடியாதபடி கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -