கிழக்கின் ஆட்சியில் இரண்டு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன!

அபூ மபாஸ்-

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கும் நிலைக்கு வந்ததன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கடந்த அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலமைச்சுப் பதவி ஸ்ரீ.மு.காங்கிரசுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் இதற்காக சகல உறுப்பினர்களும் கையொப்பமிட்டு முதலமைச்சுக்கு ஆதரவளித்ததன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண சபையின் 2015க்கான வரவு செலவுத்திட்டம் சபை நடவடிக்கைகாரணமாக இழுத்தடிக்கப்பட்டு கிடந்ததனை புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் 5 அமைச்சுக்களின் வரவு செலவு திட்டத்தினை ஒருமித்து சபைக்களித்து சபையின் அமோக ஆதரவினையும் பெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் அமைச்சுப்பொறுப்புக்கள் பகிர்ந்தளிப்பில் பல சிக்கல்கள் ஏற்பட்டதன் விளைவாக ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீ.மு.கா. செய்து கொண்ட ஒப்பந்தம் தோல்வியடைந்தது.

பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடந்தன. கடைசிவரை சமாதானமாக இருந்த ஐ.ம.சு.கூ இறுதி நேரத்தில் சில குளப்பங்களை உண்டு பண்ணியதன் விளைவாக தமிழர் விடுதலை கூட்டணியுடன் பேச்சுக்கள் நடந்து இன்று தமிழர் விடுதலைக்கூட்டணி கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்களை பெற்று இன்று ஆட்சியின் பாதிப்பங்காளர்களாக திகழ்கின்றனர்.


இரண்டு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன:

கடந்த அரசின் ஆட்சியில் கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக இருந்த வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்கா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன!

பதவிகள் பறிக்கப்பட்டதன் காரணமாக முதலைமச்சருக்கு வழங்கிய ஆதரவினை மீளப்பெற்றுக்கொண்ட UPFA க்கு ஆதரவான  06 உறுப்பினர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் இரா சம்மந்தனுடன் இரகசிய மற்றும் பரகசிய ஒப்பந்தங்கள் பல செய்தும் எல்லாமே படுதோல்வியடைந்த நிலையில் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலை கவலைக்கிடமானவை.

UPFA ஆதரவு உறுப்பினர் சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதிக்கு கிழக்கின் கல்வி மற்றும் காணியமைச்சுக்கள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிட்ட முன்னால் அமைச்சர்களுக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாண ஆட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் மற்றும்  தமிழர் விடுதலைக்கூட்டணியினதும்  ஒப்பந்தந்ததுடன் இனிதே நடைபெறும் என்பது இருகட்சிகளின் ஆதரவு மூலம் தெட்டத்தெளிவாக புலனாகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -