முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபரை கைது செய்ய உத்தரவு!

அஸ்ரப் ஏ சமத்-
பொலிஸ் - சிவில் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்பின்பேரிலும் பொலிஸ்மா அதிபர் உத்தரவின்பேரிலும் முன்னாள் மேல்மாகணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்கவை உடனடியாக விசாரணை செய்து விசாரணைக்குட்படுத்துமாறு ஊடகங்களில் செய்தி வெளியீடப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பியகம விலேஜ் உரிமையாளர் பேர்ணாட் ஜெயரத்தினவின் கொலை சம்பந்தமாக நேற்று விசேட பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, மற்றும் பொலிஸ் இண்ஸ்பெக்டர் ஆகியோர் வழங்கிய தகவல்களின் படி இக் கொலையில் சம்பந்தப்பட்டவராகவே முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2012ஆம் ஆண்டு பியகம பிளேஜின் உரிமையாளர் (வயது 65) என்பவரை துண்டம் துண்டமாக அவரது பகல தொம்பே தோட்டத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். 

இக் கொலையை கொலை செய்யப்பட்டவரின் மகனே செய்தார் என விசாரனையில் தெரியவந்தது. இச் செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக அன்று பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கொலை சம்பந்தமாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக; தற்பொழுது கடமையில் இருந்த பத்திலகே விமலசேனா, யாழ்ப்பாணத்தில் கடமையில் இருந்தவர் மற்றும் அல்பிட்டிய பொலிஸ் இண்ஸ்பெக்டர் ஆனந்த ராஜகருன, நேற்று சி.ஜ.டியினரால் கைது செய்யப்பட்டனர். 

இக் கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என விசாரணைகள் முலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் இக் கொலையில் அன்று சம்பந்தப்பட்ட 2 விசேட பொலிஸ் அதிகாரிகளே கொலை செய்தவரின் மகனுக்கு - வெடி பொருட்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -