மின் கட்டணம் மற்றும் இயந்­திர எண்­ணெயின் விலை குறைப்பு!

நாட்டில் பல தரப்­பி­னரும் நன்­மை­ய­டையும் வகையில் மின் கட்­டணம் மற்றும் இயந்­தி­ரங்­களை இயக்க பயன்­ப­டுத்தும் எண்­ணெயின் (எஞ்சின் ஒயில்) விலை குறைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்கும் மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார மின் இணைப்பு பெற்­றுக்­கொள்ளும் முறையும் இல­கு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

கொழும்பு தெமட்­ட­கொடை இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றிப் பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அதற்­கி­ணங்க நாட்டின் பொது­மக்­க­ளுக்கு அதிக சலு­கை­களை வழங்கும் நோக்­கத்தில் மின் கட்­டணம் குறைக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் இயந்­திர எண்­ணெயின் விலையும் விரை­வாக குறைப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இது­வ­ரையில் மக்கள் மின் இணைப்­புக்­களை பெற்றுக் கொள்­வதில் இருந்த இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் கட்­டணம் செலுத்­திய உடன் அள­வீட்டு மானி பொருத்­தப்­பட்டு விரைவில் மின் இணைப்பு வழங்­கப்­படும். அதன்போது மின் இணைப்பை பெறு­வ­தற்­காக தற்­போது அற­வி­டப்­படும் பணத்­திலும் கணி­ச­மான தொகை குறைக்­கப்­படும். மார்ச் மாதம் ஆறாம் திக­தியே இந்த வேலைத் திட்­டமும் கட்­டணக் குறைப்பும் அமு­லுக்கு வரும்.

மேலும் மின் இணைப்பு பெறா­த­வர்கள் எதிர்­கா­லத்தில் பெற்றுக் கொள்­வ­தற்­காக மின்­சார சபை­யுடன் தொடர்பு கொள்ள வேண்­டி­யது மட்­டுமே அவ­சியம். அதற்­காக மின்­சார சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு விரை­வாக வந்து மின் இணைப்பை பெற்­றுக்­கொ­டுக்கும்.

அத்­தோடு மின் கட்­டண குறைப்பு செய்­யப்­படும் போது இயந்­திர எண்ணெய் (எஞ்சின் ஒயில்) க்காக அற­வி­டப்­படும் கட்­ட­ணத்­திலும் குறைப்பு செய்­யப்­படும். இதனால் பொது­மக்கள் போக்­கு­வ­ரத்து மற்றும் கடல் சார் தொழில் செய்­ப­வர்­களும் இதனால் நன்­மை­ய­டைவர் என எதிர்­பார்த்­துள்ளோம் என்று அவர் மேலும் தெரி­வித்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் போக்குவரத்து சங்க உரிமையாளர்களின் சங்கத்தின் இயந்திர எண்ணெய் விலை குறைக்கப்பட வேணடும் என கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -