வெளியானது அரசியல் வாதிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள்.மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

த.நவோஜ்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சித்தாண்டி 3 கிராம சேவகர் பிரிவில் உள்ள சந்தணமடு ஆற்றில் கடந்த பல வருடங்களாக சில அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கையினை உடன் நிறுத்தி தருமாறும், சுற்றுப்புறச் சூழல் தரிசு நிலமாதலை தடுத்து உதவுமாறு கோரி திங்கள்கிழமை காலை சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய முன்பாக பிரதேச பொது மக்களினால் உண்ணாவிரதப் போராட்ட மொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் பிரதேச மக்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது குறித்த இடத்திற்கு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜாசிங்கம், இரா.துரைரெட்ணம் மற்றும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகியோர் வருகை தந்ததுடன், உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பெற்றுக் கொண்டதுடன், மக்களின் கோரிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சின் நடவடிக்கைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாகவும் மக்களிடம் உறுதியளித்தனர்.

குறித்த மகஜரில் தெரிவித்துள்ளதாவது!

தங்களை அரசியல் வாதிகள் என அடையாளம் காட்டிக் கொண்டு இயங்கும் சில அடிவருடிகள் பகல் வேளையில் சட்டரீதியாக பணிக்கப்பட்ட முறைகளைத் தாண்டி எண்ணிக்கைக்கு மாறாக பெரிய கனரக வகனங்கள் மற்றும் அகழ்வு இயந்திரங்களை பயன்படுத்தி கடந்த கால ஆட்சியில் அனுமதிப்பத்திரம் இன்றியும் இரவு வேளைகளிலும் இலக்கத் தகடு இன்றி மண் அகழ்வினை மேற்கொண்டதுடன் தொடர்ந்து நடத்திச் செல்கின்றனர்.

இச்செயற்பாடு தொடர்பாக பலமுறை பல மேல் அதிகாரிகளிடமும் ஆதாரங்களுடன் சமர்பித்தும், எந்தவித நடவடிகையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை இது எமது மக்களுக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன், இதனால் எமது கிராமத்தில் பலவிதமான சுற்றாடல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

குறிப்பாக பிரதேச செயலாளர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் ஒதுக்கப்படும் இடங்களை விட்டு வியாபார, குறுகிய நோக்கில் குறித்த ஆற்று மணல் அகழ்வதனால் ஆற்றில் இருமருங்கிலுமுள்ள சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், சுமார் 1000 ஏக்கர் வரையான காணிகள் மறைமுக தாக்கத்திற்கும் உள்ளாகின்றது.

அத்துடன் சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, முறக்கொட்டான்சேனை போன்ற கிராமங்கள் குறித்த ஆற்றுப் பாதை அனுமதியளிக்கப்பட்ட இடத்தை விட்டு சட்ட விரோதகமாக மக்கள் பயன்படுத்தும் பாதைகளிலும் குறித்த செயற்பாடு இடம் பெறுகின்றது. ஆற்று நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக பெருக் கெடுப்பதனால் மழை காலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பினை எமது ஊர் எதிர் நோக்குவது யாவரும் அறிந்த உண்மையாகும்.

அதுமட்டுமன்றி அரியவகை வனவளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை பெரும் மன வேதனையைத் தோற்றிவிக்கின்றது. குறிப்பாக பிரப்பை, மதுரை, வெல்லை, விளா மற்றும் சதுர்ப்பு நிலத்தாவரம் போன்ற வனவளங்களும் வேரோடு சரிந்து அழிவடைந்து வருகின்றது. இதனைவிட மிகமிக இழிவுகரமான செயற்பாடாக பயிரிடப்பட்டுள்ள வயல் நிலங்களில் தேங்கிக் கிடக்கும் ஆற்று மணல்கள் இரவு வேளைகளில் குவிக்கப்பட்டு வயல்களுக்குள்ளால் இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் ஏற்றப்பட்டுவதுடன், அவ் உழவு இயந்திரத்தினை செலுத்தும் சாரதிகள் மிகவேகமாக கிராம பாதையில் உழவு இயந்திரத்தினை செலுத்தி செல்வதனால் சிறு குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் மிகவும்; பாதிப்படைகின்றனர். இது மிகவும் அருவருக்கத்தக்க செயலாக காணப்படுகின்றது. 

நல்லாட்சி ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலை கௌரவ ஜனாதிபதி அவர்களின் நல்லாட்சியில் மக்களைச் சுரண்டிவாழும் அரசியல் வாதிகள் மற்றும்; அவர்களோடு தொடர்புடைய அடிவருடிகளாகச் செயற்படும் ஒரு சிலரின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என எதிர்பார்த்து வாக்களித்த எங்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமாகவே உள்ளது அதாவது பிரதேச செயலாளர் மற்றும் ஏனையோரின் அனுமதி இல்லாது தொடந்து இரவு வேளையில் இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களில் தொடரும் குறித்த செயற்பாட்டைப் பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.

நல்லாட்சியில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அப்பிரதேசத்தில் இயங்கி வரும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிடமும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் மிக இரகசியமாக (தெரிய வருமென்றால் உயிருடன் வாழ முடியாத பயங்கரம் காணப்படுகின்றமையால்) குறித்த உண்மையினை அறிந்து உடனடியாக எமது சித்தாண்டி சந்தண மடு ஆற்றின் மணல் அகழ்வினை நிறுத்தி எமது கிராமத்து மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மிக அன்பாக வேண்டுகின்றோம்.

இச்செயற்பாட்டிற்கு தீர்வு கிடைக்கப் பெறாத பட்சத்தில் சந்தணமடு ஆறு 4 கிலோ மீற்றர் தாண்டிவந்து சித்தாண்டி கிராமத்தின் மத்தியால் செல்லும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே இத்தகைய இழிவான வழியில் இவர்கள் மண் அகழ்வதினை முற்றாக நிறுத்த வேண்டும். இவ் மண் அகழ்வினால் பாரம்பரியமாக எங்களது மூதாதயினர் கட்டி காத்து வந்த எமது ஊரினையும் அதன் பாரம்பரியங்களையும் கட்டி காக்க முடியாமல் போவதுடன் எமது எதிர்கால சந்ததியினரின் வாழவிடமும் கேள்விக் குறியாகியுள்ளமை இத்தகைய மிலோட்சதனமாக மண் அகழ்வினை மேற்கொள்ளும் அருவருடிகளுக்கு ஏன புரியவில்லை.

எனவே இத்தகைய செயற்பாட்டினை உடன் நிறுத்த வேண்டும். இல்லையேன் நிறுத்தும் வரை நாம் இறந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவ் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -