நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது நடந்த சுவாரஸ்யம் ஒன்று..!

நாடாளுடன்றத்தில் நேற்று ஆரம்பித்தபோது சுவாரஸ்யமான சம்பவமொன்று நடந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, நாடாளுமன்றத்திற்குள் உட்கார்ந்திருந்த மகிந்தவின் புதல்வன் நாமல் சபையை விட்டு வெளியெறிச் சென்றுள்ளார். இதனை அரசதரப்பினர் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேற்று வியாழக்கிழமை புதிய அரசின் இடைக்கால பட்ஜட்டை சமர்ப்பித்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா உரையாற்றிக் கொண்டிருந்தார். பிற்பகல் 1.35 அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சபைக்கு வந்தார். அரசதரப்பினர் எழுந்து நின்று மேசைகளில் தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இதற்கிடையில், ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வன் நாமல் ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.

அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்தது எதிர்க்கட்சி வரிசையில் கடைசி ஆசனம். அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்தது இன்னொரு ஊழல் பெருச்சாளியான சஜின்வாஸ் குணவர்த்தன. இருவரும் தீவிரமான ஏதோ பேசிக் கொண்டிருந்த சமயத்தில்த்தான் மைத்திரி உள்ழைந்தார்.

மைத்திரி உள்நுழைவதை கண்ட நாமல், திடீரென எழுந்து சபையை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் அவசரஅவசரமாக தப்பியோடும் பணியில் வெளியேறிச் செல்வதை ஆளுந்தரப்பினர் புன்சிரிப்புடன் அவதானித்தபடி உட்கார்ந்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -