மோட்டார் சைக்கிள் புகைப்பரிசோதனை இடைநிறுத்தப்பட வேண்டும்!

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-

வாகனங்களின் புகை பரிசோதிக்கப்பட வேண்டிய கட்டாய கடப்பாடு கைத்தொழில்மய நாடுகளுக்கு உண்டு. எமது நாடு ஒரு விவசாய நாடு இங்கு வளிமண்டல மாசு தொடர்பான முறைப்பாடுகள் பெரிய அளவில் இல்லை. கொழும்பு, கண்டி போன்ற மா நகரங்களில் புகைப்பரிசோதனை செய்யப்படுவதில் ஓரளவு நியாயம் இருக்கலாம்.

மாறாக தாவரப்போர்வையால் சூழப்பட்டுள்ள கிராமப்பகுதிகளிலும் வாகனப்புகை பரிசோதனை செய்யப்படுவதில் என்ன?... நியாயம் இருக்கிறது.

பெற்றோல் வாகனங்களில் புகை குறைவானது,ஆனால் டீசல் வாகனங்களில் புகை அதிகமானது.பஸ்,லொறி,கெண்டர்,பாரவூர்தி போன்றன அதிக புகைவிடுபவை.

நடுத்தர வருமானமுள்ள மக்களின் மோட்டார் சைக்கிள்களுக்கும் புகை பரிசோதனைக்காக செலவு செய்ய வேண்டி உள்ளது. இது இவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் சிந்திக்கும் புத்திஜீவிகளைக்  கொண்ட புதிய அரசு இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

வயிறுவளர்க்கும் சிலரின் தேவைக்காக இப்புகைப்பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டதா?... என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -